ஒடிசா மாநிலம் பாலசோரில், மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மீது பெண்மனி ஒருவர் முட்டை எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
விசாரணையில் அவர் பாஜக தொண்டரின் மனைவி என தெரியவந்துள்ளது!
இன்று தல்சாரி கடற்கரை திருவிழாவின் துவக்க விழாவில் பட்நாயக் உரையாற்றி கொண்டு இருக்கையில் அந்த பெண்மணி அவரின் மீது தொடர்ந்து முட்டைகளை வீசியுள்ளார்.
மேடையில் மற்ற தலைவர்கள் அவரை தாக்குதலில் இருந்து மறைக்க முயற்சிக்கையில் அவர் மற்றவர்களிடம் இருந்து விலகி சென்றுவிட்டதாக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
காவல்துறையினரால் தனது கனவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அப்பெண்மனி இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து பாலசோர் காவல் அதிகாரி தெரிவிக்கையில்.. "கைப்பையில் யாருக்கும் தெரியாமல் முட்டைகளை கொண்டு வந்த அனைவரின் எதிர்பையும் மீறி அவர் முதல்வர் மீது முட்டைகளை எறிந்துள்ளார்" என தெரிவித்தார்.
Odisha: Woman threw eggs on CM Naveen Patnaik while he was attending an event in Balasore, eggs didn't him. Woman detained by police. pic.twitter.com/PiFd2ttmB4
— ANI (@ANI) January 31, 2018
மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அப்பெண்மனியை கைது செய்துள்ளனர்!