நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. www.ntaneet.nic.in, www.nta.ac.in என்ற இணையதளங்களில் வரும் 31-ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.1500, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ.1400, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இருந்து நாடு முழுவதிலும் உள்ள ஜிம்பர், எய்ம்ஸ் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.