நிர்பயா வழக்கு: குற்றவாளி அக்‌ஷய் குமாரின் கருணை மனு தள்ளுபடி..!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமாரின் கருணை மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!.

Last Updated : Jan 30, 2020, 04:01 PM IST
நிர்பயா வழக்கு: குற்றவாளி அக்‌ஷய் குமாரின் கருணை மனு தள்ளுபடி..! title=

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமாரின் கருணை மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நேற்று கருணை மனு ஒன்றை அனுப்பியுள்ளார் என அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். 

இதை தொடர்ந்து, குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங், தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் அக்‌ஷய் குமார் அளித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

Trending News