மேற்கு ஆப்ரிக்க நாடான பெனின் கடல் பகுதியில் 22 இந்தியர்களுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று மாயமாகி உள்ளது.
பனாமா நாட்டு கொடியுடன் சென்றுக்கொண்டிருந்த அந்த கப்பலில் எரிவாயு எண்ணெய் டேங்கர்கள் எடுத்து செல்லப்பட்டது. காண போன கப்பலை தேடும்பணி நடத்தப்பட்டு வருகிறது. கப்பல் குறித்த எந்தத் தகவலும் இதுவரை தெரியவில்லை.
கடல் கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கப்பல் மாயமான இடம் கடற் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடற்பகுதி என்று தெரியவந்திருக்கிறது.
மேலும் சர்வதேச கடல்மேலாண்மை முகமை மற்றும் கடற்கொள்ளை தடுப்பு மையத்தின் உதவியும் கோரப்பட்டிருக்கிறது.
வணிக கப்பல் கடத்தப்பட்டிருந்தால் கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்திருக்கும் 2-வது கப்பல் கடத்தல் இதுவாகும். மாயமான கப்பலில் இருந்து 22 இந்தியர்களில் 2 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.