குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சிவசேனா நிலைப்பாடு என்ன?

நாட்டிற்குள் நுழைந்த பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்றும், "இது குறித்து எந்த சந்தேகமும் இல்லை" என்றும் சிவசேனா கூறியுள்ளது.

Last Updated : Jan 25, 2020, 01:23 PM IST
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சிவசேனா நிலைப்பாடு என்ன?

நாட்டிற்குள் நுழைந்த பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்றும், "இது குறித்து எந்த சந்தேகமும் இல்லை" என்றும் சிவசேனா கூறியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து "சட்டவிரோத ஊடுருவல்களை" இந்தியாவுக்கு வெளியே விரட்டுவதற்காக பிப்ரவரி 9-ஆம் தேதி மும்பையில் தனது கட்சி மிகப்பெரிய பேரணியை நடத்தும் என்று மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே கூறியதை அடுத்து கட்சி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) மற்றும் இந்துத்துவாவை நோக்கிய அவரது நிலைப்பாட்டை மாற்றியமைத்ததற்காக கட்சி தனது ஊதுகுழலான சமனாவில், மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரேவைத் தாக்கியது. "நேற்று, குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பதாக MNS கூறியது, இருப்பினும், ஒரு மாதத்திற்கு முன்பு, அவர்கள் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது அனைவரும் அறிந்ததே" என்று சிவசேனா தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

"எங்கள் கட்சி ஒருபோதும் இந்துத்துவத்தின் சித்தாந்தத்தை விட்டுவிடவில்லை, மராத்தி மக்களுக்காகவும் பணியாற்றியது. மாநில மக்கள் எங்களை ஏற்றுக் கொள்ள இதுவே காரணம்" என்று கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது. அதேவேளையில் தாக்கரேவின் நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்றும் சேனா கேள்வி எழுப்பியது.

"சிலர் இந்துத்துவா என்ற பெயரை தங்கள் நலனுக்காக பயன்படுத்துகிறார்கள், ஆனால் சில கட்சிகள் அதைச் செய்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்வதற்கான பெரிய இதயம் நமக்கு இருக்கிறது. முடிந்தால் மேலே செல்லுங்கள்." என்றும் பகிரங்கமாக விமர்சித்துள்ளது.

More Stories

Trending News