ஹரியாணாவில் உள்ள ரோஹதக்கில் 2.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி...!!!

ஹரியாணாவில் உள்ள ரோஹ்தக்கில், புதன் கிழமைக்கு பிறகு, இன்று, ரிக்டர் அளவுகோலில் 2.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Written by - ZEE Bureau | Last Updated : Jun 26, 2020, 05:30 PM IST
  • ஹரியாணாவில் உள்ள ரோஹதக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி.
  • ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 2.8 என பதிவாக்கியது.
  • கடந்த மூன்று மாதங்களில், தில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 15 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஹரியாணாவில் உள்ள ரோஹதக்கில் 2.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி...!!!

ஹரியாணாவில் உள்ள ரோஹ்தக்கில், புதன் கிழமைக்கு பிறகு, இன்று, ரிக்டர் அளவுகோலில் 2.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹரியாணா (Haryana): கடந்த 3 மாதங்களில், தில்லி (Delhi) மற்றும் தலைநகர் வலைய பகுதியில், 15 முறைக்கும் அதிகமாக அங்கும் இங்கும் என நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த புதன் கிழமை அன்று உணரப்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு, இன்று மீண்டும் ஹரியாணாவில் உள்ள ரோஹ்தக்கில் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். லேசான நில நடுக்கம் என்பதால், தில்லியில் அதிர்வு எதுவும் உணரப்படவில்லை.

Also Read | கொரோனா தொற்று மிதமான அளவில் உள்ளவர்களுக்கு ப்ளாஸ்மா சிகிச்சை பலனளிக்கிறதா…!!!

ஹரியாணாவில் கடந்த இரண்டு நாட்களில் ஏற்படும் இரண்டாவது நில நடுக்கம் இது ஆகும். இன்று ரோஹ்தக்கில், அதாவது வெள்ளிக்கிழமை, ஜூன் 26 அன்று, மதியம் 3 மணி 32 நிமிடங்களுக்கு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 2.8 என பதிவாகியது.

நாடு முழுவதிலும், மக்கள் கொரோனா ( Corona) நோயால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் அதை எதிர்த்து போராடி வருகின்றனர். குறிப்பாக தில்லியில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் நில நடுக்கங்கள் மக்கள் மனதில் ஒரு அச்சத்தை உருவாக்கி வருகிறது என்பது மறுப்பதற்கில்லை. கொரோனா நோயின் காரணமாக, இஅயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மன ரீதியிலான பாதிப்பை சந்தித்து வரும் மக்கள், இப்போது, அடிக்கடி ஏற்பட்டு வரும் நில நடுக்கத்தினால், பீதியில் உள்ளனர். 

Also Read | COVID-19 பெரும்பாலான குழந்தைகளுக்கு லேசான பாதிப்பை ஏற்படுத்துகிறது!

தில்லியின் வாசிர்பூர் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தின் 12, 13 தேதிகளில், லேசான் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 என பதிவாகியது. அது தவிர கடந்த மாதத்தில், கிட்டத்தட்ட ஐந்து முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News