கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தலில் பாஜக ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் அதில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளது. இதுக்குறித்து யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் மீது வழக்கு பாய்கிறது அல்லது பாஜகவினரால் தேசவிரோதியாக சித்தரிக்கப்படுகிறார்கள் என தனது கூட்டணி கட்சியான பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளது சிவசேனா.
இதுக்குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தலில் பிரதமர் மோடி ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். குறிப்பாக கறுப்புப்பணத்தை மீட்பேன், அனைவரின் வங்கிகணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும், ஊழல்கள் இல்லாத ஆட்சி தரப்படும் உட்பட பல வாக்குறுதிகளை பிரதமர் மோடி அவர்கள் அளித்தார். ஆனால் தற்போது பிரதமர் மோடியிடம், அவரது வாக்குறுதிகளை பற்றி யாராவது கேள்வி கேட்டால், அவர்களை தேசவிரோதியாக பாஜகவினரால் சித்தரிக்கப்படுகிறார்கள். தேர்தல் நேரத்தில் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதற்காக மக்களிடம் ஏராளமான பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றன. ஆனால் ஆட்சிக்கு வந்தபின்பு வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகின்றன.
இந்த விசியத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா? என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.