புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான ஹாக்கி போட்டியில் இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணியை வென்றது. இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கத்தை வெல்லும் என எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்றாலும், உறுதியிடன் இறுதிநிலை வரை சென்று சாதனை படைத்த இந்திய ஹாக்கி அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரெந்திர மோடி ட்வீட் செய்து, பதக்கத்தை தவற விட்டாலும், இந்திய பெண்கள் அணி புதிய இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.
'பெண்கள் ஹாக்கி அணியின் செயல்திறனும் ஆற்றலும் எப்போதும் நினைவில் இருக்கும்'
பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) ட்வீட் செய்து, 'டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது மகளிர் ஹாக்கி அணியின் சிறப்பான செயல்பாட்டை நாடு எப்போதும் நினைவில் கொள்ளும். அணி சிறப்பாக விளையாடியது. அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் தைரியம், திறமை மற்றும் நெகிழ்ச்சியின் குறிப்பிடத்தக்க சாட்சியாக விளங்கினர். இந்த அற்புதமான அணியால் இந்தியா பெருமை கொள்கிறது. மகளிர் ஹாக்கி அணி புதிய இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கிறது’ என்றார்.
We will always remember the great performance of our Women’s Hockey Team at #Tokyo2020. They gave their best throughout. Each and every member of the team is blessed with remarkable courage, skill and resilience. India is proud of this outstanding team.
— Narendra Modi (@narendramodi) August 6, 2021
ALSO READ: Tokyo Olympics women's hockey: இந்திய வீராங்கனைகள் போராடி தோல்வி
தனது மற்றொரு ட்வீட்டில், பிரதமர் மோடி அவர்கள், ‘மகளிர் ஹாக்கியில் நாம் ஒரு பதக்கத்தை இழந்தோம், ஆனால் இந்த அணி புதிய இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கிறது. புதிய இந்தியாவில் நாம் நம்மால் ஆனவரை முயற்சித்து புதிய எல்லைகளைத் தொட முயற்சிக்கிறோம். மிக முக்கியமாக, ஒலிம்பிக்கில் அணியின் வெற்றி இந்தியாவின் இளம் பெண்களை ஹாக்கி விளையாட்டை நோக்கிச் செல்ல ஊக்குவிக்கும். இந்த அணி மீது நாடு பெருமை கொள்கிறது’ என்றார்.
We narrowly missed a medal in Women’s Hockey but this team reflects the spirit of New India- where we give our best and scale new frontiers. More importantly, their success at #Tokyo2020 will motivate young daughters of India to take up Hockey and excel in it. Proud of this team.
— Narendra Modi (@narendramodi) August 6, 2021
இந்திய அணி 5 நிமிடங்களில் 3 கோல்களை அடித்தது
இந்திய மகளிர் ஹாக்கி (Indian Hockey Team) அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல் கணக்கில் பின்னிலையில் இருந்த போதும் உறுதியுடன் மீண்டு வந்து 3-2 என முன்னிலை பெற்றது. இருப்பினும், இங்கிலாந்து இரண்டாவது பாதியில் இரண்டு கோல்களை அடித்து இந்தியாவின் நம்பிக்கையை தகர்த்தெறிந்து மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஐந்து நிமிடங்களுக்குள் இந்திய அணி மூன்று கோல்களை அடித்தது.
குர்ஜித் கவுர் 25 மற்றும் 26 வது நிமிடங்களில் கோல் அடித்தார். வந்தனா கட்டாரியா 29 வது நிமிடத்தில் கோல் அடித்தார். இங்கிலாந்து அணியில், எலெனா ராயர் (16 வது), சாரா ராபர்ட்சன் (24 வது), கேப்டன் ஹோலி பியர்ன் வெப் (35 வது) மற்றும் கிரேஸ் பால்ட்சன் 48 வது நிமிடத்தில் கோல் அடித்தனர்.
ALSO READ | Tokyo Olympics: பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம் வென்றார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR