பிரதமர் நரேந்திர மோடி: ஹரியானா பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

ஹரியானா மாநிலம் உருவானதன் 50-ம் ஆண்டு தினத்தையொட்டி இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க  பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா செல்கிறார். மேலும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

Last Updated : Nov 1, 2016, 10:02 AM IST
பிரதமர் நரேந்திர மோடி: ஹரியானா பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் title=

சண்டிகர்: ஹரியானா மாநிலம் உருவானதன் 50-ம் ஆண்டு தினத்தையொட்டி இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க  பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா செல்கிறார். மேலும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

நவம்பர் 1, 1966 அன்று ஹரியானா உருவாக்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இம்மாநிலம் உருவாக்கப்பட்டதன் 50-ம் ஆண்டு பொன்விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. ஹரியானாவில் படித்து வேலையில்லாத 30,000 முதுகலை பட்டதாரிகளுக்கு 9,000 ரூபாய் மதிப்பில் புதிய திட்டம், ‛சுவர்ண ஜெயந்தி'  எனப்படும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார். 

பிரதமர் பங்கேற்று பொன்விழாவை துவக்கி வைக்க மக்கள் வரிப்பணம் ரூ.1,700 கோடி செலவிடப்படவில்லை என்று ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் தெரிவித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் சுமத்தியுள்ளதாகவும் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு தான் செலவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Trending News