மும்பையில் உள்ள கமலா மில்ஸ் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லோவர் பேரல் என்ற இடத்தில் உள்ள கமலா மில்ஸ் அடுக்குமாடி கட்டட வளாகத்தில் இருந்த உணவகத்தில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்துக்கு காரணமாக இருந்ததாக கூறி உணவக உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பகுதியில்; மும்பை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
விரைவாக மீட்பு பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு படையினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Disturbing news about the fire in Mumbai. Condolences to the bereaved families and wishing the injured an early recovery. Commend the valiant efforts of fire-fighters and those in rescue ops #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) December 29, 2017