காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளார். மொத்தம் 150 நாட்களில் அவர் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். புலியூர்குறிச்சியில் 3-வது நாள் பாத யாத்திரையைத் தொடங்கிய ராகுல்காந்தி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கட்சியினரிடையே ஒற்றுமை இல்லாத நிலையில், மக்களின் ஒற்றுமைக்காக நடைபயணம் தொடங்கியிருப்பது முரணாக இருப்பதாக செய்தியாளர்கள் ராகுலிடம் கேள்வி எழுப்பினர்.
இந்திய ஒற்றுமை நடைபயணம் என்பது காங்கிரஸ் கட்சியின் முடிவு எனவும், காங்கிரஸ் கட்சியிலும், நடைபயணத்திலும் எந்த முரண்பாடும் இல்லை என ராகுல் பதிலளித்தார். மேலும் காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சியின் தேர்தல் வரும்போதுதான் தான் தலைவர் ஆவேனா, இல்லையா என்பது தெரிய வரும் எனவும், தான் எந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது தொடர்பாக முடிவெடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
தனது முடிவில் எந்தக் குழபப்மும் இல்லை , எனவே தேர்தல் வரும் வரை பொறுத்திருக்க வேண்டுமெனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார். இந்த யாத்திரை மூலம் தன்னைப் பற்றியும், இந்த அழகான நாட்டைப் பற்றியும் ஓரளவு புரிந்துகொள்ள முடிவும் எனவும், இந்த மூன்று மாதங்களில் தனது அறிவு மேலும் விரிவடையும் எனவும் ராகுல் காந்தி கூறினார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு வாக்குகள் எண்ணப்படும்.
டனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ