Congress Vs Ghulam Nabi Azad: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்குடன் இருந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து திடீர் என விலகுவதாக அறிவித்து சோனியா காந்திக்கு 5 பக்க கடிதத்தை எழுதியுள்ளர. அந்த கடிதத்தில், குறிப்பாக ராகுல் காந்தியின் செயல்பாடுகளை ஆசாத் கடுமையாக சாடியுள்ளார். மேலும், கட்சியின் தேர்தல் வியூக செயல்பாடுகளையும் அவர் விமர்சித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, 2013ல் ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு, முன்பு இருந்த ஆலோசனை, திட்டமிடல் என அனைத்து அமைப்புகளும் அவரால் தகர்க்கப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியின் நிலைமை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வர முடியாத நிலையை எட்டியுள்ளது எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்திக்கு எழுதிய 5 பக்க கடிதத்தின் முக்கிய சாராம்சம்:
சோனியா காந்தியை "பெயரளவிலான ஆளுமை" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான முடிவுகளை "ராகுல் காந்தி அல்லது அதைவிட மோசமான அவரது பாதுகாவலர்களால் எடுக்கப்பட்டது.
மேலும் படிக்க: இப்படிப்பட்ட அரசியல் செய்வதற்கு வெட்கமில்லையா பிரதமரே... ராகுல் காந்தி தாக்கு
தீவிரம் இல்லாத ஒரு நபரை கட்சியின் தலைமைப் பொறுப்பில் அமர்த்துவது. காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்த செயல்முறையும் ஒரு கேலிக்கூத்தாக ஆகிவிட்டது.
ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு, குறிப்பாக ஜனவரி 2013க்குப் பிறகு, அவர் உங்களால் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டபோது, முன்பு இருந்த முழு ஆலோசனை அமைப்பும் அவரால் தகர்க்கப்பட்டது.
மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டனர். மேலும் "அனுபவம் இல்லாத துறவிகளின் புதிய கூட்டம்" கட்சியின் விவகாரங்களை இயக்கத் தொடங்கியது.
மேலும் படிக்க: காங்கிரஸ் தலைவராகிறாரா அசோக் கெலாட்?
துரதிர்ஷ்டவசமாக, இப்போது கட்சியின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றுவதற்கு பினாமிகள் துடிக்கிறார்கள். காங்கிரஸ் "திரும்ப முடியாத நிலையை" அடைந்துள்ளது.
'பாரத் ஜோடோ யாத்திரை' தொடங்குவதற்கு முன், தலைமை 'காங்கிரஸ் ஜோடோ யாத்திரை'யை மேற்கொண்டிருக்க வேண்டும்.
நாட்டில் எந்த இடத்திலும் எந்த மட்டத்திலும் காங்கிரஸ் அமைப்பின் தேர்தல் நடத்தப்படவில்லை. அக்பர் ரோடு 24ல் உள்ள ஏஐசிசி அமைப்பால் தயாரிக்கப்பட்ட பட்டியல்களில் கையெழுத்திட வற்புறுத்தப்பட்டது.
கடந்த எட்டு ஆண்டுகளில் தலைமை தீவிரமான ஒரு நபரை கட்சியின் தலைமையில் பதவியில் அமர்த்த முயற்சித்ததால் பாஜக மற்றும் பிராந்தியக் கட்சிகளுக்கு காங்கிரஸ் தனது அரசியல் இடத்தை விட்டுக் கொடுத்துள்ளது.
தேசிய அளவில் பாஜகவுக்கு கிடைத்த அரசியல் இடத்தை நாங்கள் (காங்கிரஸ்) மற்றும் மாநில அளவிலான இடத்தை பிராந்தியக் கட்சிகளுக்கு விட்டுவிட்டோம்.
மேலும் படிக்க: வரலாற்று உண்மைகளை தவறாக சித்தரிப்பதை காங்கிரஸ் எதிர்க்கும் -சோனியா காந்தி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ