சென்னை: கன்னியாகுமரியில் "பாரத் ஜோடோ" யாத்திரை தொடக்க விழாவுக்காக தமிழ்நாடு வந்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை "பாரத் ஜோடோ யாத்ரா" என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறார. மத்திய பாஜக அரசின் தவறான செயல்பாடுகள், கொள்கைகள் காரணமாக பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்வதாக காங்கிரஸ் கட்சி மேலிடமும் அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல்காந்தி 3570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் 150 நாட்களுக்கு நடைபெறும் இந்த பாதயாத்திரையின் தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்க உள்ளது.
இந்நிலையில், இந்த இந்திய ஒற்றுமை பாதயாத்திரை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த ராகுல் காந்தி சென்னையிலிருந்து இன்று காலை சாலை மார்கமாக காரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு அங்கு கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
மேலும் படிக்க: இந்தியாவில் இந்த சர்வாதிகாரத்துக்கு 'உண்மை' தான் முடிவு கட்டும் -ராகுல் காந்தி
அதன் பின் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் சுமார் இரண்டு நிமிடம் தரையில் அமர்ந்துக் கொண்டு ஆழ்ந்த தியானத்திலும் அவர் ஈடுபட்டார். அதன் பின் ராஜீவ் காந்தி நினைவிடத்தின் நுழைவு வாயில் முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியை ராகுல் காந்தி ஏற்றி வைத்து பின் அங்கிருந்து காரில் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11.40 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு செல்கிறார். அங்கு இந்திய ஒற்றுமை பாதயாத்திரையின் தொடக்க விழாவில் பங்கேற்கவுள்ளார்.
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ராகுல் காந்தி, "வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் தான் எனது தந்தையை இழந்தேன். அதே காரணங்களுக்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன். அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும். நாம் ஒன்றாக வெல்வோம் எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: இப்படிப்பட்ட அரசியல் செய்வதற்கு வெட்கமில்லையா பரதமரே... ராகுல் காந்தி தாக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ