காஷ்மீரில் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் அங்கு அமைதி திரும்பவில்லை. இதன் பின்னணியில் பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அம்மாநில முதல்வர் முப்தியும், மக்கள் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார். இருப்பினும் ஆங்காங்கே கலவரம் நடந்து கொண்டு உள்ளது. அம்மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் டில்லி வந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்தனர்.
தற்போது அங்கு நிலைமை கொஞ்சம் மாறி வருவதால், ஸ்ரீநகர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டது. இருப்பினும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக இன்று காஷ்மீர் சென்றடைந்தார். அப்போது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இந்த மாதத்தில் காஷ்மீருக்கு அவர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.
காஷ்மீர் பயணம் குறித்து தனது டுவிட்டர் சமூகவலை தளத்தில் அவர் கூறியதாவது:-
I will be staying at the Nehru Guest House. Those who believe in Kashmiriyat, Insaniyat and Jamhooriyat are welcome.
— Rajnath Singh (@rajnathsingh) August 24, 2016
Leaving New Delhi for Srinagar on a two day visit. Shall interact with civil society groups, political parties and other stakeholders.
— Rajnath Singh (@rajnathsingh) August 24, 2016