அமேதியில் திங்களன்று ஸ்மிருதி இரானி 'காணவில்லை' என்ற சுவரொட்டிகள் பல இடங்களில் காணப்பட்டன. காங்கிரஸ் எம்.எல்.சி தீபக் சிங் தனது ட்விட்டர் ஹேண்டில் மூலம், ஸ்மிருதி இரானி அமேதியில் காணப்படாதது பற்றி கேள்வி எழுப்பினார்.
அமேதி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தொடர்ச்சியான பல ட்வீட்டுகளில், தனது தொகுதியான அமேதியில் அவர் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியதற்காக காங்கிரசைக் கண்டித்தார். அமேதியில் திங்களன்று ஸ்மிருதி இரானி 'காணவில்லை' என்ற சுவரொட்டிகள் பல இடங்களில் காணப்பட்டன. காங்கிரஸ் எம்.எல்.சி தீபக் சிங் தனது ட்விட்டர் ஹேண்டில் மூலம், ஸ்மிருதி இரானி காணப்படாதது பற்றி கேள்வி எழுப்பினார்.
"கொரோனா அமேதியைத் தாக்கியபோது, உங்கள் (காங்கிரஸ்) தலைவர்கள் லாக்டௌன் விதிகளை மீறினர். நீங்கள் ட்விட்டர்-ட்விட்டர் விளையாடுவதற்காக, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர நான் ஊக்குவிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா? அமேதி உங்களுக்கு அன்புக்குரிய இடமாக இல்லாமல் இருக்கலாம். எனக்கு அப்படி அல்ல. மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
READ | LPG மானியம் வங்கிக் கணக்கில் ஏரியுள்ளதா என்பதை மொபைல் மூலம் அறியலாம்...
மற்றொரு ட்வீட்டில், "இதுவரை அமேதிக்கு அனைத்து விதிகளையும் பின்பற்றி, புலம்பெயர்ந்தோர் 22,150 பேர் பேருந்துகள் மூலமும் 8,322 பேர் ரயில்கள் மூலமும் திரும்பி வந்துள்ளனர். ஒவ்வொரு நபரின் பெயரையும், குடும்ப விவரத்தையும் என்னால் கொடுக்க முடியும். இதே போன்ற விவரங்களை, ராய் பரேலிக்கு சோனியா ஜி-யால் கொடுக்க முடியுமா? " என்று கேட்டார்.
தனக்கு எதிராக அச்சடிடப்பட்ட சுவரொட்டிகளைப் பற்றி ட்வீட் செய்த அமைச்சர், மற்றொரு ட்வீட்டில், "நீங்கள் சுவரொட்டிகளை வைத்திருந்தால், குறைந்தபட்சம் உங்கள் பெயரையும் அதில் கொடுக்க வேண்டும். ஏன் இவ்வளவு வெட்கப்படுகிறீர்கள்? ஒரு உள்ளூர் தலைவரின் தகன ஊர்வலத்தில் நான் கலந்து கொண்டதை வெட்கக்கேடான முறையில் குறிப்பிட்டவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்பதாலா?" என்று கேட்டிருக்கிறார்.
அவர் தொடர்ந்து மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தகுதியான ஒவ்வொரு நபருக்கும் பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் நன்மை கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். "சோனியா ஜி தனது தொகுதிக்கு எத்தனை முறை இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்?" என்றும் அவர் கேட்டுள்ளார்.
READ | ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்க விருப்பமா? இதோ ஒரு பொன்னான வாய்ப்பு...
அமேதிக்கு அவர் தந்த வருகைகளை பற்றி தெரிவித்து, அமைச்சர் தனது தொடர்ச்சியான ட்வீட்களில், "நான் எட்டு மாதங்களில் பத்து முறை அமேதியைப் பார்வையிட்டேன், 14 நாட்கள் அமேதியில் கழித்தேன். சோனியா ஜி தனது தொகுதியை எத்தனை முறை பார்வையிட்டார்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
'காணவில்லை' என வந்த இந்த சுவரொட்டிகள், சுவாரஸ்யமாக, சமூக ஊடக தளங்களில் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களால் பரவலாக பகிரப்பட்டன, எனினும், அவர்களது கட்சித் தலைவர்களால் சுவரொட்டிகள் வைக்கப்பட்டன என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்து விட்டனர்.
2019 தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து, இரண்டு முறை சில மணிநேரங்களுக்கு மட்டுமே, பாஜக எம்.பி-யான ஸ்மிரிதி, மாவட்டத்திற்கு விஜயம் செய்ததாக அந்த சுவரொட்டிகளில் கூறப்பட்டுள்ளது.
எம்.பி-யின் புகைப்படத்துடன், கருப்பு வெள்ளையில் அச்சிடப்பட்டுள்ள சுவரொட்டிகள், "நீங்கள் ட்விட்டரில்` அந்தாக்ஷரி 'விளையாடுவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.. அப்படியே சிலருக்கு உணவு கொடுங்கள்...அமேதி மக்கள் இப்போது அவர்களின் தேவைகளையும் சிரமங்களையும் நிவர்த்தி செய்ய உங்களைத் தேடுகிறார்கள் . " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவரொட்டிகளில் `அமேதி இரானிக்கு ஒரு சுற்றுலா தலமாக இருந்தது 'என்று கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய பெண்கள் காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலிருந்து இந்த சுவரொட்டியைப் பகிர்ந்துள்ளது.
அமேதியில் `காணவில்லை' சுவரொட்டி போர்கள் 2019 வரை ஒரு வழக்கமான நிகழ்வாக இருந்தன. ராகுல் காந்தி தொடர்ந்து தனது தொகுதிக்கு வராமல் இருந்ததால், அவருக்காக இப்படிப்பட்ட சுவரொட்டிகள் வெளிவந்தன.
அரசியலில் நடக்கும் பல வினோத விளையாட்டுகளில் இந்த சுவரொட்டி விளையாட்டும் ஒன்றோ?
- மொழியாக்கம்: ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.