வன்முறையை பரப்புவது நாட்டுக்கு எதிரான துரோக செயல்: ராம்தேவ்

வன்முறையை பரப்புவது, நாட்டை பிளவுபடுத்துவது பற்றி பேசுவது நாட்டுக்கு எதிரான துரோக செயல் என யோக் குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Jan 27, 2020, 01:54 PM IST
வன்முறையை பரப்புவது நாட்டுக்கு எதிரான துரோக செயல்: ராம்தேவ் title=

வன்முறையை பரப்புவது, நாட்டை பிளவுபடுத்துவது பற்றி பேசுவது நாட்டுக்கு எதிரான துரோக செயல் என யோக் குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்!!

முன்னாள் JNU மாணவர் ஷர்ஜீல் இமாம் கூறிய கருத்துக்கள் தொடர்பாக தொடர்ந்து வரும் சர்ச்சைகளுக்கு மத்தியில், யோகா குரு ராம்தேவ் "வன்முறையை பரப்புவதும், நாட்டை பிளவுபடுத்துவது பற்றி பேசுவதும் ஒரு துரோக செயல்" என்று தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனமான ANI-யிடம் பேசிய யோகா குரு ராம்தேவ்., "வன்முறையை பரப்புவது, நாட்டை பிளவுபடுத்துவது பற்றி பேசுவது நாட்டிற்கு எதிரான துரோக செயல். பொறுப்புள்ள குடிமகன் அல்லது கட்சி யாரும் அவ்வாறு செய்யக்கூடாது" என்று கூறினார்.

"இந்தியாவின் முஸ்லிம்கள் பெயரில் சிலர் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்" என்று ராம்தேவ் கூறினார். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்பதை விட JNU மற்றும் பிற பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலில் இருந்து விலகி தங்கள் படிப்பில் கவனம் செலுத்துமாறு ராம்தேவ் அறிவுரை வழங்கியுள்ளார். மாணவர்கள் "வன்முறை மற்றும் அராஜகத்தை பரப்புவது" மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது பொருத்தமானதல்ல என்று ராம்தேவ் கூறியிருந்தார்.

"வன்முறை, கோபம், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அராஜகம் தவிர வேறு எந்த வேலையும் இங்கு நடைபெறவில்லை" என்று கடந்த பல மாதங்களாக இந்தியா உலகில் அவதூறு செய்யப்படுவதாக அவர் கூறினார். "JNU-விடம் மட்டுமல்ல, பிற பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களும் அரசியல் கட்சிகளுக்கு 'ஆண்டோலன்' (ஆர்ப்பாட்டங்களை) விட்டுவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன், இல்லையெனில் அவர்கள் வேலையில்லாமல் இருப்பார்கள். அவர்கள் (மாணவர்கள்) தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்தி அவர்களின் திறமைகளை வளர்க்க வேண்டும்," ராம்தேவ் என்று கூறினார்.

யோகா குரு கூறுகையில்., மாணவர்கள் "தேசத்தைக் கட்டியெழுப்புவதில்" கவனம் செலுத்தி வன்முறை, அராஜகம் மற்றும் போராட்டங்களின் பாதையை விட்டு வெளியேற வேண்டும். "மாணவர்கள் ஆசாதிக்கு கோஷங்களை எழுப்புகிறார்கள். இது காந்தி, நேரு மற்றும் பகத் சிங் ஆகியோரின் ஆசாதி என்றால், அதைப் புரிந்து கொள்ள முடியும், ஆனால் ஜின்னாவைப் போல ஆசாதிக்காக கோஷங்கள் எழுப்பப்பட்டால், அது தேசத்துரோகம் மற்றும் துரோகம். (ஹர் சாமே ஆசாதி கே நரே லகனா மற்றும் உஸ்மே பீ ஜப் காந்தி, நேரு அவுர் பகத் வாலி ஆசாதி கி பாத் ஹோதி ஹை டு சமாஜ் மீ ஆதி ஹை பெர் ஜப் ஜின்னா வாலி ஆசாடி கே நரே லக்தே ஹை டு யே தேஷ் கே சாத் சரசர் கடாரி ஆவூர் தோகாதி "என்று அவர் கூறினார். 

 

Trending News