டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் மூத்த தலைவர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இன்று குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு, நேற்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அரசு அழைப்பு விடுத்திருந்தது.
பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இப்பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்காக வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, இப்பிரச்சினை பற்றி விவாதிக்க இருக்கிறது.
மேலும், இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதல், பாகிஸ்தான் பற்றிய மத்திய அரசின் கொள்கை, விவசாயிகள் நிலைமை, மத்திய பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளது.