முதியவரை தாக்கியதால், போக்குவரத்து காவலர் இடைநீக்கம்!

மகாராஷ்டிர மாநிலம் தானேவின் உல்லாஷ்நகர் பகுதியில், முதியவர் ஒருவரை தாக்கியதாக போக்குவரத்து காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Feb 12, 2018, 11:25 PM IST
முதியவரை தாக்கியதால், போக்குவரத்து காவலர் இடைநீக்கம்! title=

தானே: மகாராஷ்டிர மாநிலம் தானேவின் உல்லாஷ்நகர் பகுதியில், முதியவர் ஒருவரை தாக்கியதாக போக்குவரத்து காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்!

இச்சம்பவத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் RK பாட்டில் மற்றும் முதியவர் ஜவகர் லுல்லா-விற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முத்தி கைகலப்பில் முடிவடைந்துள்ளது.

பின்னர் சம்பந்தப்பட்ட காவலர், லுல்லா விடம் சமாதானம் கோருகையில் அவர் மறுத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இருவரும் மற்றொருவரின் மீது உல்லாஷ்நகர் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தினை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். 

Trending News