சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் திருநங்கைகள்

Last Updated : Aug 11, 2016, 07:29 PM IST
சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் திருநங்கைகள் title=

ஒடிசாவில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் முதன் முறையாக திருநங்கைகள் பாரம்பரிய உடையில் பங்கேற்க உள்ளனர்.

சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா அணி வகுப்பில் திருநங்கைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா அணி வகுப்பில் பாதுகாப்பு படையினருடன் திருநங்கைகள் 32 பேர் பாரம்பரிய உடை அணிந்து இந்த அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். இதனால் அவர்கள் தீவிர ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநங்கைகளை 3-வது பாலினமாக கடந்த ஜுன் மாதம் உச்சநீதிமன்றம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News