புது டெல்லி: டெல்லி-என்.சி.ஆர் உட்பட நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் வேலை செய்யும் போது, அவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் உடல் அழுத்தம் குறித்த விரிவான ஆய்வு ஒன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறையில் பணிபுரியும் சேவ் லைஃப் அறக்கட்டளை நடத்திய ஆய்வில் பல ஆச்சரியமான விஷயங்கள் வெளிவந்துள்ளன.
அதில், லாரி ஓட்டுநர்கள் ஆண்டுதோறும் ரூ .47,852 கோடி லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி கொடுத்தால் தான்.. அவர்களால் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த லஞ்ச பணத்தை மாநில நெடுஞ்சாலை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை மற்றும் ஆர்டிஓக்கள் மற்றும் வரி வசூலிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் உள்ளூர் ரவுடிகள் மற்றும் பிற குற்றவியல் பிரிவுகளை சேர்ந்தவர்களும் கொடுக்க லஞ்சம் தர வேண்டும். இந்த லஞ்சமாக கொடுக்கும் பணத்தின் தொகையை வழக்கமாக டிரக்கின் உரிமையாளர் அல்லது டிரக் மூலம் பொருட்களை அனுப்பும் நபர் ஏற்க வேண்டும். அது ஊழலின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, லாரி ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு சுமார் 12 மணி நேரம் வாகனம் ஓட்ட வேண்டும். சுமார் 50 சதவீத ஓட்டுநர்கள் சோர்வாக இருந்தாலும் அல்லது தூக்கத்தில் இருந்தாலும் தொடர்ந்து வாகனம் ஓட்டுகிறார்கள். கணக்கெடுக்கப்பட்ட ஒவ்வொரு 5 டிரக் டிரைவர்களில் ஒருவர் லாரி ஓட்டும் போது தூக்கத்தைத் தவிர்க்க மருந்துகளைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார். இதுபோன்ற ஓட்டுநர்கள் அதிக எண்ணிக்கையில் கொல்கத்தாவில் இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து கான்பூர் மற்றும் டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் உள்ள லாரி ஓட்டுனர்கள் இடம் பெற்றுள்ளனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.