பிகார்: பிகாரின் லலித் நாராயண் மிதிலா யுனிவர்சிட்டியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு வழங்கிய அனுமதி அட்டையில் மாணவரின் புகைப்படத்திற்கு பதிலாக வினையாகரின் புகைப்படம் பதியப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
பிகாரின் லலித் நாராயண் மிதிலா யுனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் ஜே.என். கல்லூரி என பரவலாக அழைக்கப்படும், ஜக்தேஷ் நந்தன் கல்லூரி, மதுபாணியில் இளங்கலை பொருளியல் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டினில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக வினாயகர் சாமியின் புகைப்படம் மாற்றி பதியப்பட்டுள்ளதை கண்டித்து அம்மாணவர் பல்கலை கழகத்திற்கு புகார் தெரிவித்துள்ளர்.
#Bihar: Lalit Narayan Mithila University issued admit card bearing photograph of Lord Ganesha to 1st-year BCom (Hons) student of JN College pic.twitter.com/iC9KJGKX76
— ANI (@ANI) October 6, 2017
சமீப காலமாக ஆதார் அட்டைகள், ரேசன் அட்டைகளை போன்றவற்றில் புகைப்படங்களை மாறி அச்சிடப்பட்டு வந்த நிலையினில் தற்போது இந்த பிரச்சனை கல்லூரி படிவங்கள் வரை எட்டிவிட்டது!