உன்னாவ் பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண் சுயநினைவின்றி கவலைக்கிடம்

பாதிக்கப்பட்ட பெண் இன்னும் மயக்க நிலையிலிருந்து எழவில்லை என உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

Last Updated : Aug 2, 2019, 03:02 PM IST
உன்னாவ் பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண் சுயநினைவின்றி கவலைக்கிடம் title=

புதுடெல்லி: பாதிக்கப்பட்ட பெண் இன்னும் மயக்க நிலையிலிருந்து எழவில்லை. அவர் அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயது பெண் கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் புகார் அளித்து ஒரு வருடமாகியும் எந்தவித நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டிய இளம் பெண், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட பெண் தன் தற்கொலைக்கு முயன்றார். இதன் பிறகு, இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. 

ஆயுதம் வைத்திருந்ததாக அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் பெண்ணின் தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்த போதே மரணமடைந்துள்ளார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது. பா.ஜ.க எம்.எல்.ஏ-வை கைதுசெய்யக் கோரியும் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதன்பின்னர், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் சென்காரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து குல்தீப்சிங் சென்காரின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் மிரட்டி வந்துள்னர். இதனால் பாதிக்கப்பட்டவரின் தாயும் பாதிக்கப்பட்ட பெண், எங்களுக்கு நீதி வேண்டும். நாங்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகிறோம் என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, முதன்மைச் செயலாளர் (உள்துறை), டிஜிபி, காவல் ஆய்வாளர், சிபிஐ தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (உன்னாவ்) ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். 

இதன்பின்னர் கடந்த வாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது உறவினர் மற்றும் வழக்கறிஞர் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிறுமியின் உறவினர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் "பாதிக்கப்பட்ட பெண் இன்னும் மயக்க நிலையிலிருந்து எழவில்லை. அவர் அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. விபத்தில் சிக்கிய பெண்ணின் வழக்கறிஞருக்கு வென்டிலேட்டர் அகற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

Trending News