ஜம்மு -காஷ்மீரில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதில்,ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 9 பேர் நேற்று முதல் மாயமாகியுள்ளனர்.
ஜம்மு- காஷ்மீரில் உள்ள தங்தரில் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பனிச்சரிவு ஏற்படுகிறது. இதில், ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 9 பேர் கொண்ட குழு நேற்று முதல் மாயமாகியுள்ளனர்.
பனிச்சரிவினால், பனிக்கட்டிகள் விழுந்ததில், தங்தரில் பனிச்சரிவு பகுதி முற்றிலுமாக மூடிய நிலையில் உள்ளது.
தற்போது மீட்புக்குழுவினர், பனிச்சரிவில் சிக்கிய காணமல் போனவர்களை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்,பனிச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
#WATCH J&K: 9 people, including a vehicle carrying 6 people, went missing in avalanche in Kupwara's Tangdhar, yesterday. Search and rescue operations still underway. (5.1.2018) pic.twitter.com/29WzCqdGx2
— ANI (@ANI) January 6, 2018