உலகின் திறந்த பொருளாதாரமாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி

மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்துப் பேசினார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்துப் பேசுய மோடி, பொருளாதாரம், ராணுவம், அறிவியல் ஆய்வு ஆகிய துறைகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தார். 

Last Updated : Nov 11, 2016, 01:15 PM IST
உலகின் திறந்த பொருளாதாரமாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி title=

டோக்கியோ: மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்துப் பேசினார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்துப் பேசுய மோடி, பொருளாதாரம், ராணுவம், அறிவியல் ஆய்வு ஆகிய துறைகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தார். 

இந்திய - ஜப்பான் இரதரப்பு நல்லுறவு மாநாட்டில் பங்கேற்பதற்காக டோக்கியோவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் அகிடிடோவை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை அங்கு நடைபெறவுள்ள இருதரப்பு நல்லுறவு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

ஜப்பான் மன்னருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு நல்லுறவு மேம்பாடு குறித்தும், ஆசிய நாடுகளின் எதிர்கால நலன் தொடர்பாகவும் கலந்தாலோசித்ததாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இரு நாடுகளுக்கு இடையிலான இரு வர்த்தக மாநாடுகளில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார். அப்போது அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருக்கிறது. 

 

Trending News