ஒரு வினோதமான வளர்ச்சியில், மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் திங்களன்று மாட்டிறைச்சி சாப்பிடும் மக்களை 'மாட்டிறைச்சி சாப்பிட்டதற்கு' பதிலாக நாய் இறைச்சியை சாப்பிடலாம் என தெரிவித்துள்ளார்.
"கல்வி கற்றோர் பலரும் சாலையோரத்தில் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றனர். ஏன் மாடிறைச்சி உண்கிறீர்? நாய் இறைச்சியையும் சாப்பிடலாமே?. அதுவும் ஆரோக்கியத்திற்கும் நல்லது தான். ஏன் மற்ற விலங்குகளின் இறைச்சியையும் சாப்பிடுங்கள். உங்களை யார் தடுக்கிறார்கள்? ஆனால் ஒன்று. நீங்கள் சாப்பிட விரும்புவதை உங்கள் வீட்டில் வைத்து சாப்பிடுங்கள். சாலையில் அல்ல, மாடு எங்கள் தாய், நாங்கள் மாடு கொலை செய்வதை சமூக விரோதமாக பார்க்கிறோம். வெளிநாட்டு நாய்களை வீட்டில் வைத்து, அவர்களின் மலத்தை கூட சுத்தம் செய்யும் நபர்கள் இங்கு உள்ளனர். அவர்களுக்கு பசுவின் புனிதம் புரியாது” என்று கோஷ் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் மாடு எங்கள் தாய் என்றும், இந்தியர்கள் மாட்டுப் பால் உட்கொண்டு உயிருடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன் தாய் எனும் போற்றும் பசுவிடம் யாராவது தவறாக நடந்து கொண்டால், அவர்களும் அதே விதத்தில் பதில் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Dilip Ghosh, Bharatiya Janata Party (BJP) West Bengal President, in Burdwan: Few intellectuals eat beef on roads, I tell them to eat dog meat too, their health will be fine whichever animal they eat, but why on roads? Eat at your home. (4.11.19) pic.twitter.com/s5Muy6sBfn
— ANI (@ANI) November 5, 2019
நாட்டு பசுவின் பாலில் தங்கம் இருப்பதாகவும், எனவே "அதன் பால் தங்க நிறத்தில் உள்ளது" என்றும் கோஷ் குறிப்பிட்டிருந்தார். "இந்தியா கோபாலின் (பகவான் கிருஷ்ணர்) இடமாகும், மேலும் பசு (மாடு) மீதான மரியாதை என்றென்றும் இங்கு நீடித்திருக்கும். தாய் பசுவைக் கொல்வது ஒரு கொடூரமான குற்றம், அதை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். தாய்ப்பால் கொடுத்த பிறகு, ஒரு குழந்தை பசுவின் பாலில் உயிர் பிழைக்கிறது. மாடு எங்கள் தாய், யாராவது எங்கள் தாயைக் கொன்றால் நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தொடர்ந்து பசு வதைகளை எதிர்த்து வருகிறது. அந்த வகையில் பாஜக ஆளும் உத்திரபிரதேச மாநிலத்தில் பது பாதுகாப்பு அமைச்சரையும் நியமித்திருந்தது. மேலும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்பதற்கு தடை விதித்தது. இந்நிலையில் தற்போது மேற்கு வங்கு பாஜக தலைவர், கட்சியின் கோட்பாட்டை தங்கள் மாநிலத்தில் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.