மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி வடிவமைத்த பிரத்யேக மாநில சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து புதிய சின்னம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அசோகத் தூண் அடங்கிய பிஸ்வா பங்ளா சின்னம் கடந்த மே மாதம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அரசு சின்னத்திற்கு மத்திய அரசு ஜனவரி மூன்றாம் தேதி அனுமதி அளித்து உள்ளது. இதனையடுத்து சின்னத்தை மம்தா பானர்ஜி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் அவர்,பீகார், உத்தரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களுக்கு பிரத்யேகமாக சின்னம் உள்ளது. அதைத்தொடர்ந்து மேற்கு வங்காளம் மாநிலத்திற்கு லோகோ உருவாக்க முடிவு செய்துள்ளோம். அந்த லோகோவில் மற்ற மாநிலங்களின் சின்னங்களில் இல்லாதவாறு தேசிய சின்னம் இடம் பெறும் என மம்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி பேசுகையில், உத்தரபிரதேசம், நம்முடைய சின்னத்தில் அசோகத் தூண் இடம்பெற்று பெருமை வாய்ந்தது என்றும் பீகார் உள்பட அதிகமான மாநிலங்கள் அவர்களுக்கு என தனி சின்னம் கொண்டு உள்ளனர். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்திற்கு ஒரு சின்னம் இல்லையென நாங்கள் கண்டறிந்தபோது, சின்னத்தை வடிவமைத்து ஒப்புதலுக்காக மையத்திற்கு அனுப்பினோம். இது எங்களுக்கு பெருமையான ஒரு நாள் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
West Bengal Chief Minister Mamata Banerjee unveiled logo of the state government. pic.twitter.com/D5Wyi0TmW8
— ANI (@ANI) January 5, 2018