வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவை கேட்டு தான், அவர் தீவிரவாதியாக மாறியதாக வங்கதேச அரசு கூறியது.
இதைத்தொடர்ந்து, ஜாகிர் நாயக்கின் நடவடிக்கை மற்றும் அவரின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்களை மும்பை போலீஸ் மற்றும் மத்திய அரசும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. மாநில உள்துறையிடம் போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
ஜாகிர் நாயக் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது போலீஸ் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது என்று மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். ஜாகிர் நாயக் மீதும், அவரது அமைப்பின் மீதும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது அவருடைய என்.ஜி.ஒ.-வின் எப்.சி.ஆர்.ஏ லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. விசாரணை நடைபெற்று காலத்தில் தான் எப்.சி.ஆர்.ஏ லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. லைசன்ஸ் புதுப்பித்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் 4 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உள்ளது.