வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவை கேட்டு தான், அவர் தீவிரவாதியாக மாறியதாக வங்கதேச அரசு கூறியது.
இதைத்தொடர்ந்து, ஜாகிர் நாயக்கின் நடவடிக்கை மற்றும் அவரின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்களை மும்பை போலீஸ் மற்றும் மத்திய அரசும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. மாநில உள்துறையிடம் போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
வங்கதேச தலைநகர் டாக்கா பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், மும்பையில் உள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு மற்றும் வீடியோ தங்களை கவர்ந்ததாக கூறியிருந்தனர்.
இதனையடுத்து ஜாகிர் நாயக் சர்ச்சையில் சிக்கினார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை ஜாகிர் மறுத்ததுடன், பயங்கரவாத செயல்களையும் கண்டித்திருந்தார்.
சர்ச்சையில் சிக்கியுள்ள முஸ்லீம் மதபோதகர் ஜாகீர் நாயக்கால் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்புக்கு கிடைக்கும் நிதியுதவி குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.