புது டெல்லி: Bank Holidays in February 2022: 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் அதாவது பிப்ரவரி வரவிருக்கிறது. இதனுடன், பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த மாதம் மொத்தம் 12 நாட்கள் வங்கிகள் மூடப்படும். இருப்பினும், இந்த விடுமுறைகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளின் விடுமுறையாக இருக்கும். பிப்ரவரி மாதத்தில், பசந்த பஞ்சமி, குரு ரவிதாஸ் ஜெயந்தி போன்ற பாண்டிகைகளில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் விடுமுறையாக இருக்கும். விடுமுறையின் முழு விவரத்தை இங்கே காண்போம்.
12 நாட்கள் வங்கி விடுமுறை
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை (Bank Holidays) அளிக்கப்படுகிறது. இந்த முறை பிப்ரவரி மாதத்தில் (Bank Holidays February 2022) சில விடுமுறைகள் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வருக்கின்றன. அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது பிராந்தியத்துடன் தொடர்புடைய பல விடுமுறைகள் உள்ளன. எனவே, வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம்.
ALSO READ | SBI Alert: இந்த தேதி முதல் IMPS பரிவர்த்தனைக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்
விடுமுறை நாட்களின் பட்டியலைப் பார்க்கவும்
தேதி விடுமுறை
2 பிப்ரவரி: சோனம் லோச்சார் (காங்டாக்கில் வங்கி மூடல்)
5 பிப்ரவரி: சரஸ்வதி பூஜை/ஸ்ரீ பஞ்சமி/பசந்த பஞ்சமி (அகர்தலா, புவனேஷ்வர், கொல்கத்தாவில் வங்கிகள் மூடல்)
6 பிப்ரவரி: ஞாயிற்றுக்கிழமை
12 பிப்ரவரி: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
13 பிப்ரவரி: ஞாயிற்றுக்கிழமை
15 பிப்ரவரி: முகமது ஹஸ்ரத் அலி பிறந்தநாள் (இம்பால், கான்பூர், லக்னோவில் வங்கிகள் மூடல்)
16 பிப்ரவரி: குரு ரவிதாஸ் ஜெயந்தி (சண்டிகரில் வங்கிகள் மூடல்)
18 பிப்ரவரி: டோல்ஜாத்ரா (கொல்கத்தாவில் வங்கி மூடல்)
19 பிப்ரவரி: சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாபூர், மும்பை, நாக்பூரில் வங்கிகள் மூடல்)
20 பிப்ரவரி: ஞாயிற்றுக்கிழமை
26 பிப்ரவரி: மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
27 பிப்ரவரி: ஞாயிற்றுக்கிழமை
ALSO READ | SBI News: இந்த கணக்கு உங்ககிட்ட இருக்கா? இதில் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR