7 Daily Habits That Will Make You A Better Person : நம்மை உயர்ந்த மனிதராக மாற்ற சில தினசரி பழக்கங்கள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றினால் வாழ்க்கையே மாறிவிடும். அவை என்னென்ன தெரியுமா?
காலை தியானம்:
காலையில் தியானம் செய்வதால், கவனம் அதிகரித்து பாசிடிவாக யோசிக்க தோன்றும். முதலில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை தினமும் தியானம் செய்ய ஆரம்பியுங்கள். முதலில், மூச்சு விடுவதில் கவனம் செலுத்துங்கள், உங்கள் மனதை சுத்தப்படுத்துங்கள், உங்களுடைய அன்றைய நாள் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அதை காட்சிப்படுத்தி பாருங்கள்.
உடற்பயிற்சி:
தினமும் உங்கள் உடலுக்கு வேலை கொடுப்பது அல்லது உடற்பயிற்சி செய்வது, மனதையும் உடலையும் திடமாக்கும். தினசரி, 20 முதல் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள்.
உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு போக வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வீட்டிலிருந்தபடியே முடிந்த உடற்பயிற்சிகளை செய்யலாம். யோகாசனம், வாக்கிங் செல்வது, ஸ்ட்ரெட்சிங் செய்வது போன்றவற்றையும் செய்யலாம்.
கற்றல்:
நமக்கு எவ்வளவு வயது ஆகியிருந்தாலும், நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள் கையளவு மட்டுமே இருக்கும். கற்றுக்கொள்ளாதவை உலகளவில் குவிந்து கிடக்கும். எனவே, தினமும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
தினமும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்வது, உங்கள் புத்தியை ஷார்ப்பாக வைத்துக்கொள்ள உதவும். இது உங்களுக்கு உலகை வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்க்கவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவும். 15 முதல் 30 நிமிடங்கள் வரை தினமும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ளலாம்.
இலக்கை நிர்ணயித்தல்:
தினமும், உங்களது சின்ன சின்ன இலக்கை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். தினமும் காலையில், “இந்த நாட்களுக்குள் இந்த வேலையை எல்லாம் நான் செய்து முடித்து விட வேண்டும்” என்று லிஸ்ட் போடுங்கள். அந்த நாள் முடிவதற்குள் அந்த வேலைகளை செய்து முடியுங்கள். இது, உங்களை கவனமாக வைத்துக்கொள்ளவும் ஒழுக்கமாக வைத்துக்கொள்ளவும் உதவும்.
ஜர்னல் எழுதுதல்:
வாழ்க்கையில் நமக்கு பல விஷயங்கள் கிடைத்துள்ள போதிலும், சில நேரங்களில் அதை மறந்து விட்டு வாழ்க்கையை பற்றி குறைசொல்ல ஆரம்பித்து விடுவோம். இதனால், தினமும் அந்த நாளில் நிங்கள் நன்றி கூறும் வகையில் நடைப்பெற்ற 3 விஷயங்களை எழுதி வைக்கவும். இது, உங்களை நல்ல மனிதராக மாற்றும்.
ஆரோக்கியமான உணவு:
தினமும், வாய்க்கு ருசியான உணவுகளை சாப்பிட்டாலும் அவை ஆரோக்கியமானவையாக இருக்கிறதா இல்லையா என்பதை பார்க்க வேண்டும். உங்கள் உடல் ஆற்றலை அதிகரிக்கும் உணவுகளையும், ஆரோக்கியம் தரும் உணவுகளையும் சாப்பிட வேண்டும். தினமும் 8 கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
பிரதிபலிப்பு:
உங்களுக்குள் இருக்கும் பலம், நீங்கள் உங்களுக்குள் உயர்த்துக்கொள்ள விரும்பும் விஷயங்கள் என்ன இருக்கிறது என்பதை ஆராய வேண்டும். உறங்க செல்வதற்கு முன்பு, அந்த நாளில், உங்களை உயர்த்திக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தீர்களா என்பதை பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?
மேலும் படிக்க | வெற்றியை வீடு தேடி வரவைக்கும் 5 தினசரி பழக்கங்கள்!! எல்லாமே ஈசி..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ