How To Fall Asleep Quickly : தூக்கமின்மை பிரச்சனை என்பது உலகில் பலருக்கு ஏற்படும் பிரச்சனையாக இருக்கிறது. மன அழுத்தம், உணவு எடுத்துக்கொள்வதில் மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களினால் தூக்கம் வராமல் இருக்கலாம். படுத்தவுடன் எளிதாக உறங்க சில டிப்ஸ் இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
மூச்சுப்பயிற்சி:
இந்த பயிற்சி, உங்கள் உடலை ரிலாக்ஸ் செய்து, மனதை நிதானப்படுத்த உதவும். பலருக்கு, மனம் அலைபாய்வதால்தான் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, இந்த பயிற்சிகளை செய்யலாம்.
- மூக்கால் 4 வினாடிகளுக்கு மூச்சை இழுக்க வேண்டும்.
- 7 வினாடிகளுக்கு மூச்சை அடக்க வேண்டும்
- வாயால் 8 வினாடிகளுக்கு மூச்சை வெளியேற்றா வேண்டும்
- இப்படி 4 முறை செய்து விட்டு, மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.
கூலான அறை:
சில சமயங்களில் நீங்கள் உறங்கும் அறை, மிகவும் கூலாகவோ அல்லது சூடாகவோ இருந்தால் உறக்கம் வராது. எனவே, உங்கள் ரூம் டெம்பரேச்சரை சரி செய்து விட்டு உறங்க முயற்சி செய்ய வேண்டும்.
தசை தளர்வு:
உறங்க செல்வதற்கு முன்பு, உங்கள் பாதங்களை, கால்களை மற்றும் கைகளை அசைத்து, அதற்கேற்ற ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சிகளை செய்யவும். இது, உங்கள் மூளை உடலின் மீது கவனம் செலுத்த உதவும்.
ஸ்கிரீன் டைம்:
உறங்க செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு செல்போன் மற்றும் லேப்டாப்பை ஓரம்கட்ட வேண்டும். உங்கள் தூக்க ஹார்மோன்கள், இந்த ஸ்கரீன் டைமால் பாதிக்கப்படாலாம். எனவே, உறங்குவதற்கு முன்பு இதிலிருந்து தள்ளி இருப்பது நல்லது.
காட்சிப்படுத்துதல்:
படுத்த பின்பு, நீங்கள் ஒரு அமைதியான மற்றும் ரிலாக்ஸான இடத்தில் இருப்பது போல கற்பனை செய்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு புல்வெளியில், கடற்கரையில் அல்லது ஒரு காட்டை மனதில் காட்ச்சிப்படுத்த வேண்டும். அதிலிருக்கும் சத்தம், வாசனை அனைத்தையும் கற்பனை செய்ய வேண்டும். இது, நீங்கள் சீக்கிரமாக உறங்க உதவும்.
இயற்கை ஒலிகளைப் பயன்படுத்தவும்:
சிலருக்கு கடற்கறையின் அலை சத்தம், பறவைகள் சத்தம், சாதாரண காற்றின் சத்தம் ஆகிய ஒலிகள் அமைதியை தரும். இதற்கென்று சில செயலிகள் இருக்கின்றன. இது, எளிதில் தூங்க உதவும்.
கடிகாரத்தை பார்ப்பதை தவிர்க்கவும்..
தூக்கம் வரவில்லை என்றால், கடிகார்ததை பார்த்துகொண்டே இருப்பதையோ அடிக்கடி போனை எடுத்து பார்ப்பதையோ தவிர்க்க உதவும். எனவே, உங்கள் கடிகாரத்தின் பக்கம் இருந்து திரும்பி படுக்கவும்.
நறுமனங்கள்..
லாவண்டர் மற்றும் சாமந்திப்பூவின் (chamomile) நறுமனங்கள் உங்களை சீக்கிரமாக உறங்க வைக்குமாம். உங்கள் தலையனையில் அல்லது அறையில் இந்த வாசனை திரவியம் கொண்ட ஸ்ப்ரேவை பயன்படுத்தவும்.
மேலும் படிக்க | தூக்கம் உங்கள் கண்களை தழுவ... ‘இந்த‘ தவறுகளை செய்யாதீங்க...
மேலும் படிக்க | உங்கள் வயதிற்கு ஏற்ப தினசரி எவ்வளவு தூக்கம் அவசியம் தேவை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ