கிரெடிட் கார்டில் உள்ள பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றுவது எப்படி?

Credit Card: கிரெடிட் கார்டுகள் நமது தேவைகளை பூர்த்தி செய்தாலும், சரியான நேரத்தில் பணத்தை திரும்பி செலுத்தவில்லை என்றால் கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.  

Written by - RK Spark | Last Updated : Dec 7, 2023, 06:52 AM IST
  • அவசர தேவைகளுக்கு கிரெடிட் கார்ட் பயன்படுகிறது.
  • மாத கடைசியில் பயனுள்ளதாக இருக்கும்.
  • தவணை முறையில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
கிரெடிட் கார்டில் உள்ள பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றுவது எப்படி? title=

கிரெடிட் கார்டு பலருக்கும் பயனுள்ள ஒரு சேவையாக உள்ளது.  அவசரத்திற்கு பொருட்கள் வாங்குவதில் இருந்து, தவணை முறையில் மொபைல், லேப்டாப் வாங்குவது வரை பயனுள்ளதாக உள்ளது.  ஒவ்வொரு வங்கிகளும் மக்களுக்கு அவர்களின் பரிவர்த்தனையை பொறுத்து லிமிட் வழங்குகின்றனர்.  இந்நினையில், உங்கள் கிரெடிட் கார்டில் இருக்கும் பணத்தை உங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ள முடியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்து இருக்கும்.  ஆம், கிரெடிட் கார்டில் உள்ள பணத்தை உங்கள் வங்கி கணக்குகளுக்கு மாற்றி கொள்ள முடியும்.  உங்களின் வங்கிக் கணக்கிற்கு எப்படி மாற்றுவது? அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 

மேலும் படிக்க | TNEB: மழை வெள்ள பாதிப்பினால் மின் கட்டணம் செலுத்தும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

கிரெடிட் கார்டிலிருந்து வங்கிக் கணக்கிற்கு எப்படி மாற்றுவது?

ஆயுள் காப்பீட்டுக்கு பணம் செலுத்துதல், அடமானக் கொடுப்பனவுகள் போன்ற சில நிதி சம்பந்தமான பரிவர்த்தனைகளுக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்கள் கிரெடிட் கார்டில் உள்ள பணத்தை உங்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி, பின்னர் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு செலவழித்து கொள்ளலாம். 

கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை மாற்ற வழிகள்:

இணைய பரிமாற்றம்

நீங்கள் பயன்படுத்தும் அரசு அல்லது தனியார் வங்கிகள் நெட் பேங்கிங் சேவையை  வழங்கினால், அதன் மூலம் பணத்தை மாற்றி கொள்ள முடியும்.  இதற்கு, உங்கள் வங்கி நெட் பேங்கிங் கணக்கிற்கு சென்று, கிரெடிட் கார்டில் நிதி பரிமாற்றம் என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு வேண்டிய தொகையை உள்ளிட்டு நிதி பரிவர்த்தனையை தொடரலாம்.  

போன் கால்

கிரெடிட் கார்டு வழங்கும் சில வங்கிகள் தொலைபேசி அழைப்பின் மூலம் பணத்தை மாற்றி கொள்ளும் வசதியை வழங்குகின்றனர்.  இந்த முறையில் பணத்தை மாற்றி கொள்ள உங்கள் கிரெடிட் கார்டு வங்கிகளுக்கு போன் பேங்கிங் மூலம் தேவையான விவரங்களை வழங்கி உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றி கொள்ளலாம்.

நேரடியாக மாற்றுவது

பல தனியார் மற்றும் அரசு வங்கிகள் உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து உங்களின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் நேரடியாக பணத்தை அனுப்ப அனுமதிக்கின்றன. ஆனால், இந்த பரிவர்த்தனைகளுக்கு தினசரி வரம்புகள் உள்ளது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.  இந்த நடைமுறை வங்கிகளுக்கு வங்கி மாறுபடலாம்.  எனவே கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை மாற்றும் முன்பு உங்கள் வங்கிகளிடம் நிபந்தனைகளை கேட்டு கொள்ளுங்கள். 

காசோலை

இணைய சேவைகளுக்கு பதிலாக பழமையான முறையில் நிதி பரிவர்த்தனை செய்ய விரும்பினால், காசோலையில் பெறுநரின் பெயரில் 'self' என்று எழுதி, விவரங்களை பூர்த்தி சேர்த்து அதனை உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைகளில் டெபாசிட் செய்யவும்.

கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

கிரெடிட் கார்டுகள் அவசர தேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.  எனவே வங்கி கணக்குகளுக்கு கிரெடிட் கார்ட் மூலம் பணத்தை மாற்றும் முன்பு யோசித்து முடிவெடுங்கள்.  மேலும், இதற்கு வங்கி கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கலாம்.  கிரெடிட் கார்டு மூலம் அதிகளவு நிதி பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். மேலும், கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது அவசியம்.  அப்படி செய்ய தவறினால், இது உங்களின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.

மேலும் படிக்க | சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்? வரம்பை மீறினால் வருமான வரி நோட்டீஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News