'சாவன்' புனித மாதம்: சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்!

இந்துக்களின் புனித மாதம் எனப்படும் சாவன் மாதத்தின் முதல் திங்கட்கிழமையான இன்று வடமாநிலங்களில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 30, 2018, 09:32 AM IST
'சாவன்' புனித மாதம்: சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்! title=

இந்துக்களின் புனித மாதம் எனப்படும் சாவன் மாதத்தின் முதல் திங்கட்கிழமையான இன்று வடமாநிலங்களில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. 

வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம் 'சாவன்' என்று அழைக்கப்படும் ஆடி மாதம் ஆகும். கங்கையிலிருந்து, ”காவட்” மூலம் புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் சிவன் கோவிலில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது இவர்களுக்கு வழக்கம். 

அதன்படி சாவன் புனித மாதத்தின் முதல் திங்களான இன்று,  உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மஹாகலேஷ்வர் கோவில், மும்பையில் உள்ள பாபுல்நாத் கோயில் மற்றும் டெல்லியில் உள்ள கவுரி ஷங்கர் கோயில் வரனசியில் உள்ள காசி விஸ்வநாத் கோயில் உள்ளிட்ட சிவன் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல் வரிசையில் நின்று வழிபாடு செய்து வருகின்றனர்.

Trending News