ஆப்கானிஸ்தானுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரைக் காண, கிரிக்கெட் மைதானத்திற்கு பறந்த ஆப்கானிய மனிதருக்கு உயரம் ஒரு பிரச்சினையாக அமைந்துள்ளது.
8 அடி 2 அங்குல உயரமுள்ள ஷெர் கான், தான் தங்குவதற்கு ஒரு இடத்தை தேடி பல ஹோட்டல்களை பார்வையிட்டார், ஆனால் எந்த ஹோட்டலும் அவரது உயரத்திற்கு ஒரு அறை மரியாதைக்கு வாடகைக்கு விட ஒப்புக் கொள்ளவில்லை.
தனியாக ஒரு புதிய நகரத்தில் அலைந்து திரிந்த ஷெர் கான் தனது உதவிக்காக காவல்துறையை அணுகினார், பின்னர் காவல்துறை உதவியுடன் அவர் நாக்கா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் ராஜதானிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனிடையே ஷெர்கான் குறித்த தகவல்கள் வைரலாக நகரத்தில் பரவ, காபூலில் வசிக்கும் மக்கள் ஆப்கானின் உயரிய மனிதரை காண ஹோட்டலுக்கு வெளியே கூடியிருந்தனர். இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் தெரிவிகையில்., “அவரைப் பார்க்க 200 பேர் வந்துள்ளனர். கூட்டத்தை பார்த்தை அவர் மிகவும் கலக்கம் அடைந்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
ஹோட்டலுக்கு வெளியே கூடியிருந்த மக்கள் காரணமாக, சர்வதேச போட்டி விளையாடும் ஏகானா ஸ்டேடியத்திற்கு கானை காவல்துறையினர் உதவியுடன் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
இந்த விவகாரம் தற்போது காபுலில் வைரலான ஒரு செய்தியாக உருவெடுத்துள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு ஷெர் கான் காபுலில் தங்கிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கானின் இருப்பு அப்பகுதி மக்களுக்கு வேடிக்கையான ஒரு விஷயமாக பார்க்கப்படும் என கூறப்படுகிறது.