கர்ப்பிணி பெண்கள் தங்களது கர்ப காலத்தில் மீன் எண்ணெய் எடுத்துக்கொள்ளுதல் வயிற்றில் உள்ள அவர்களது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது!
கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில்... கர்ப்பிணி பெண்கள் மீன் எண்ணெய் வில்லைகளை எடுத்துக்கொண்டால் அது அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு உடல் பருமனை அதிகரிக்காமல், BMI எனப்படும் உறுதியான சதைகளை உண்டாக்கித் தரும் என தெரிவிக்கின்றது.
கர்ப காலத்தின் 24-வது வாரத்தில் இருந்து மீன் எண்ணெயினை எடுத்துக்கொண்டால், குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போது மட்டுமல்ல அவர்கள் வளரும் போதும் அது அவர்க்களின் ஆரோக்கியத்திற்கு பயன்படும் என இந்த ஆய்வு கூறுகிறது. அதாவது குழந்தை பிறந்து 6 ஆண்டுகள் வரை குழந்தையின் சதை வளர்ச்சிக்கு இந்த மீன் எண்ணெய்கள் உதவுகிறது என கோபன்ஹேகன் பல்கலை கழக இணை ஆசிரியர் ஹான்ஸ் பிஸ்கார்ட் தெரிவித்துள்ளார்.
"மீன் எண்ணெய்க் பெறப்பட்டு வளர்ந்த குழந்தைகளின் ஆறு வயதிற்கு உட்பட்ட உடல் அமைப்பு, ஒல்லியான, எலும்பு, மற்றும் கொழுப்பு நிறைந்த அளவிலான விகிதத்தில், N-3 நீண்ட சங்கிலி பல்யூஎன்சியுரேட்டட் கொழுப்பு அமிலத்தின் பொதுவான வளர்ச்சியை தூண்டுவதைக் குறிக்கிறது."
அதிக எடை கொண்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் கர்ப்பிணி பெண்களில் பலர் மீன் எண்ணெயை அதிகம் சாப்பிடுள்ளனர் என சோதனைகள் பல தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மருத்துவர் பிஸ்கார்ட் தெரிவிக்கையில்... "கர்ப்ப காலத்தில் பெண்கள் டயட்டில் இருக்கும் பட்சத்தில் அது குழந்தைகள் வளர்ச்சி மற்றும் சுகாதாரத்தில் ஒரு முக்கியமான தாக்கத்தினை ஏற்படுத்தும்" என குறிப்பிடுகின்றார்.
"குறிப்பாக, N-3 நீண்ட சங்கிலி பல்யூஎன்னேட்டேட் கொழுப்பு அமிலங்கள் கொண்டிருக்கும் மீன் எண்ணெய்களை (LCPUFA) உட்கொள்ளல் குழந்தைகளின் போதுமான வளர்ச்சிக்கு முக்கியமான காரணியாக அமைகின்றது!