ரூ.957-க்கு விமான டிக்கெட்;... அசத்தும் Go Air விமான சேவை நிறுவனம்!

பட்ஜெட் விமான நிறுவனமான Go Air மீண்டும் விமான டிக்கெட்டுகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Last Updated : Feb 26, 2020, 05:45 PM IST
ரூ.957-க்கு விமான டிக்கெட்;... அசத்தும் Go Air விமான சேவை நிறுவனம்!

பட்ஜெட் விமான நிறுவனமான Go Air மீண்டும் விமான டிக்கெட்டுகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Go Air Go Fly விற்பனையின் கீழ் நிறுவனம் பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 26 வரை பல படி சலுகை கட்டணங்களில் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த சலுகை விற்பனையில் நிறுவனம் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட்டுகளையும் வழங்குகிறது. விற்பனையின் கீழ், நிறுவனம் உள்நாட்டு வழித்தடங்களில் ரூ.957-க்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்ய துவங்குகிறது. சர்வதேச விமானத்திற்கான ஆரம்ப விலை ரூ.5,295-ஆக வைக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 11 முதல் ஏப்ரல் 5, 2020 வரையிலான பயண டிக்கெட்டுகளை இந்த விற்பனையின் கீழ் மிகவும் மலிவாக முன்பதிவு செய்யலாம். அதேவேலையில் நிறுவனம் அகமதாபாத் முதல் இந்தூர் வரை ரூ.957-க்கு மலிவான டிக்கெட்டை வழங்கி வருகிறது. அதேப்போல் பெங்களூரிலிருந்து கொழும்புக்கு டிக்கெட் ரூ.5,295-க்கு மட்டுமே வசூளிக்கிறது. மேலும் கொச்சி முதல் பெங்களூரு வரை (ரூ.1,059), கொல்கத்தா முதல் புவனேஸ்வர் (ரூ .1,529), இந்தூர் முதல் புது தில்லி (ரூ.1,543), புனே முதல் பெங்களூரு (ரூ.1,590), மும்பை முதல் பெங்களூரு வரை (ரூ.1,654), ஹைதராபாத் முதல் கோவா வரை (ரூ.1,659) )-என மிகவும் மலிவான விலையில் டிக்கெட் விற்பனை செய்கிறது.

சர்வதேச விற்பனையினை பொறுத்தவரையில் அபுதாபி முதல் கண்ணூர் (ரூ.5,626), டெல்லி முதல் பாங்காக் (ரூ.6,232), மும்பை முதல் பாங்காக் (ரூ.6,258), அபுதாபி முதல் மும்பை (ரூ.6,286) உள்ளிட்ட பல சர்வதேச வழித்தடங்களில் Go Air மலிவான டிக்கெட்டுகளை வழங்குகிறது. 

Go Air இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக டிக்கெட்டுகளை மலிவான விலையில் விற்பனை செய்கிறது. முன்னதாக, காதலர் தினத்தின்போது, ​​நிறுவனம் சலுகை கட்டணத்தில் டிக்கெட்டுகளை விற்றது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News