EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் உள்ள லட்சக்கணக்கான இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய செய்தி வெளிவந்துள்ளது. சமீபத்தில், சென்னை இபிஎஃப் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.9,000 ஆக உயர்த்தக் கோரி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா? இது குறித்த சமீபத்திய தகவல் என்ன? முழு விவரங்களை இங்கே காணலாம்.
Minimum Monthly Pension
தற்போது, EPFO-ன் கீழ் உள்ள இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members), ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (Employee Pension Scheme) 1995-ன் கீழ், குறைந்தபட்சம் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை 2014-ல் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என தனியார் துறை ஊழியர்களிடமிருந்து தொடர்ச்சியாக பல கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்கள் சார்பில் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான கோரிக்கை ஏன் வைக்கபட்டு வருகின்றது?
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் அதிக வாழ்க்கைச் செலவு காரணமாக, ரூ.1,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் போதுமானதாக கருதப்படவில்லை. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் பயன்பெறுவது போல, தனியார் துறை ஊழியர்களுக்கும் அதே போன்ற வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என சென்னை இபிஎஃப் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம் கூறுகிறது.
இது குறித்து எழுதப்பட்ட கடிதத்தில், ‘இபிஎஸ் 1995 இன் (EPS 95) கீழ் சுமார் 75 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். ஆனால், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் 23 லட்சம் மத்திய ஊழியர்கள் மட்டுமே பயனடைவார்கள்' என்பதை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
EPS Pension: தற்போதைய EPFO ஓய்வூதிய அமைப்பு
- குறைந்தபட்ச ஓய்வூதியம்: மாதம் ரூ 1,000 (2014 முதல் பொருந்தும்)
- பென்ஷன் கணக்கீட்டு ஃபார்முலா: (கடந்த 60 மாத அடிப்படை சம்பளம் X பணிக்காலம்) / 70
- பங்களிப்பு:
- பணியாளர்கள்: அடிப்படை சம்பளத்தில் 12%
- முதலாளி: அடிப்படை சம்பளத்தில் 12% (இதில் 8.33% ஓய்வூதிய நிதிக்கு செல்கிறது)
- தகுதி: 10 வருட சேவை மற்றும் 58 வயது
EPFO Pension: முன்மொழியப்பட்ட மாற்றங்கள் மற்றும் கோரிக்கைகள் என்ன?
- குறைந்தபட்ச ஓய்வூதியம்: மாதம் ரூ 9,000 + அகவிலைப்படி
- சம்பள வரம்பு: தற்போதைய ரூ.15,000ல் இருந்து ரூ.21,000 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை உள்ளது
- ஓய்வூதிய சூத்திரத்தில் திருத்தம்: ஊழியர்கள் அதிக பலன்களைப் பெற முடியும்
- அகவிலைப்படியைச் சேர்த்தல்: விலைவாசி உயர்வைச் சமாளிக்க இது ஏதுவாக இருக்கும்.
Pensioners: EPFO ஓய்வூதியம் அதிகரிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
- ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் தரம் சிறக்கும்: ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் செலவுகளை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும்.
- நிதிப் பாதுகாப்பு: முதுமையில் நிதி பாதுகாப்பு கிடைக்கும்.
- சமநிலை: அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களிடையே ஓய்வூதிய பலன்களில் உள்ள இடைவெளி குறையும்.
- சேமிப்பிற்கு ஊக்கம்: மக்கள் தங்கள் பணிக்காலத்தில் அதிகமாகச் சேமிக்க ஊக்குவிக்கப்படுவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ