மூலிகைகளின் ராணி என அழைப்படும் துளசி, ஆயுர்வேத மருத்துவத்தில், பல்வேறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக, அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதற்கு துளசி மிகவும் சிறந்தது. பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காண துளசி உதவும். நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி என பல்வேறு வகைகள் உள்ளன. இவை அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.
துளசி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீஸ், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. துளசி டீயை தினமும் குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி நீர் குடிக்கத் தொடங்கினால், உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்களை நீங்களே உணரலாம்.
டீடாக்ஸ் பானம்
துளசி நீர் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கும் சிறந்த டீடாக்ஸ் பானம். வெறும் வயிற்றில் இதனை குடிப்பதால், உடல் கழிவுகள் நீங்கி, உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். அன்றைய நாளை மன உற்சாகத்துடனும், ஆற்றலுடனும் தொடங்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
துளசி நீரை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் அதிகரிக்கலாம். சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட துளசி இலை நீர் உதவும்.
மேலும் படிக்க | பாராசிட்டமால் மாத்திரை அடிக்கடி சாப்பிடுவீர்களா.... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
உடல் பருமன்
உங்கள் எடை இழப்பு பயணத்தை எளிதாக்க விரும்பினால், துளசி நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அர்நுதவும். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த இயற்கை பானத்துடன் உங்கள் நாளைத் தொடங்குவதன் மூலம் வியக்கத்தக்க மாற்றத்தை காணலாம்.
இதய ஆரோக்கியம்
இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கவும் விரும்பினால், தினமும் துளசி இலை நீரைக் குடிக்கத் தொடங்குங்கள். உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படும்.
குடல் ஆரோக்கியம்
துளசி நீர் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதுமட்டுமின்றி துளசி இலைகளை குடிப்பதன் மூலமும் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கலாம்.
துளசி நீர் தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இப்போது துளசி இலைகளை கொதிக்கும் தண்ணீரில் போட்டு சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். இப்போது இந்த தண்ணீரை ஒரு கோப்பையில் வடிகட்டவும். நல்ல பலனைப் பெற, தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலை தண்ணீரைக் குடிக்கத் தொடங்குங்கள்.
வாய் துர்நாற்றம்
நாள்தோறும் துளசி நீர் பருகி வருவதால் குடல் புண், வாய் புண் உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் துளசி நீரை குடித்தால் வாய் மணக்கும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | இரவில் படுக்கும் முன் 2 கிராம்பு போதும்... பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ