எமனை ஏமாற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த நாய்! எத்தனை வயது தெரியுமா?

அமெரிக்காவில் செல்லப்பிராணி நாய் ஒன்று தன் வகை நாய்களின் அதிகபட்சமான ஆயுட்காலத்தைத் தாண்டியும் உயிர் வாழ்ந்துக்கொண்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 19, 2022, 09:11 PM IST
  • "இனிமையான, மென்மையான மற்றும் அன்பான செல்லப்பிராணி இது"
  • நாயின் வீடியோவிற்கு 17,000 க்கும் மேற்பட்டோர் லைக்குகளை கொடுத்துள்னனர்.
எமனை ஏமாற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த நாய்! எத்தனை வயது தெரியுமா? title=

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் க்ரீனாக்ரேஸின் கிசெலா ஷோர் (Gisela Shore) என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் ஒரு செல்லப்பிராணி நாய் ஒன்று உள்ளது.

அந்த செல்லப் பிராணி நாயானது சிஹுவாஹுவா (Chihuahua) வகையைச் சேர்ந்தது. இதன் பெயர் டோபிகீத் (TobyKeith). இந்நிலையில் அந்த நாய் 21 ஆண்டுகள் 66 நாட்களை கடந்து வாழ்ந்து வருகிறது.

இதில் என்ன சிறப்பு என்றால் இந்த சிஹூவாஹூவா வகை நாய்கள் அதிகபட்சம் 12 முதல் 18 வருடங்கள் தான் வாழுமாம். ஆனால் இந்த சிஹுவாஹுவா நாய் ஆனது அதையும் தாண்டி ஆரோக்கியமாக 21 வருடங்கள் வாழ்ந்துள்ளது.

மேலும் படிக்க | அட நம்புங்க: ரூ. 30,000 லேட்டஸ்ட் போனை வெறும் ரூ.9,499-க்கு வாங்கலாம், அசத்தும் பிளிப்கார்ட்

இதன் மூலம் இந்த நாய் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த நாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. மேலும், இந்த நாய் "உலகின் மிகப் பழமையான நாய்" என்றும் அழைக்கப்படுகிறது. 

இது குறித்து நாயின் உரிமையாளர் ஷோர் கூறுகையில்,  "இனிமையான, மென்மையான மற்றும் அன்பான செல்லப்பிராணி இது" என்று தெரிவித்தார். மேலும், கின்னஸ் அமைப்பு  தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த நாய் குறித்து பதிவிட்டுள்ளது.

உரிமையாளர் ஷோர் மிகுந்த பெருமையுடன் தனது செல்லப்பிராணி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது என தனது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார்.

இந்நிலையில், கின்னஸ் உலகசாதனை அமைப்பினரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த நாயின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவிற்கு 17,000 க்கும் மேற்பட்டோர் லைக்குகளை கொடுத்துள்னனர் என்பது குறிப்பிடதக்கது.

 

மேலும் படிக்க | ஏர்டெல் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் திருத்தப்பட்டன இனி இந்த பலன்கள் கிடையாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News