கருவளையத்தை செலவே இல்லாமல் நீக்கலாம்! ‘இதை’ ட்ரை பண்ணுங்க..

How To Remove Dark Circles : கண்களுக்கு கீழ், அழகை கெடுக்கும் வகையில் இருக்கும் கருவளையத்தை நீக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதோ சில டிப்ஸ்.   

Written by - Yuvashree | Last Updated : Oct 1, 2024, 06:31 PM IST
  • கருவளையத்தை போக்க டிப்ஸ்
  • ஈசியான வழிமுறைகள்
  • செலவே இல்லாமல் செய்யலாம்..
கருவளையத்தை செலவே இல்லாமல் நீக்கலாம்! ‘இதை’ ட்ரை பண்ணுங்க.. title=

How To Remove Dark Circles : அதிகரித்த நொறுக்குத்தீனி :அன்றாட வாழ்க்கை முறை தற்போது அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே வருகிறது. இதனால் உணவை விட நொறுக்கு தீனியை சாப்பிடும் பழக்கம் அதிகமாகிவிட்டது. . உணவு நேரத்தை மொத்தமாக மக்கள் மாற்றிவிட்டார்கள், அந்தவகையில் தனக்குப் பசித்தால் ஒரு பீட்ஸா, குடிக்க  ஸ்டைலாக  ஒரு ஜுஸ்  இருந்தால் போதும் என்று நினைத்து  மக்கள் வாழ்க்கையைக் கடக்கின்றனர். இது, நமது உட்புற ஆராேக்கியத்தை பாதிப்பது மட்டுமன்றி, வெளிப்புற தோற்றத்தையும் பாதிக்கிறது. அதில் ஒன்றுதான் கண்களுக்கு கீழ் கருவளையம் வருவது. 

கருவளையம்:

கண்ணுக்குக் கீழே இருக்கும் தோள் மிகவும் மென்மையானது. அதை அச்சுறுத்தும் வகையில்  நாம் எதையும் செய்யக்கூடாது. இருகண்களில் இருக்கும் நரம்புகள் எளிதில் பாதிப்படையும் தன்மை கொண்டுள்ளது. கருவளையம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா? 

தூக்கம்:

  • ஒரு மனிதன் வாழ உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்குத் தூக்கம் அவசியம். தூக்கத்தை கட்டுப்படுத்தி வேலை செய்துவந்தால் அபாயத்தில் கொண்டு சென்று விட்டுவிடும்.
  • தூங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. தூங்கும் நேரத்தில் சரியாகத் தூங்கினால் உடலுக்கும், கண்களுக்கும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
  • தூங்குவதற்கு டிப்ஸ்:
  • தூங்குவதற்கு முன் முகத்தை தண்ணரில் கழுவியபின் உறங்கினால் நன்றாகத் தூக்கம் வரும்.
  • சராசரியாக ஒரு மனிதனுக்கு எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.
  • தூங்கும் நேரத்தை விட்டு வேறு நேரத்தில் தூங்கினால் அந்த அளவிற்குப் பெரிதாக  புத்துணர்ச்சியை கொடுக்காது.
  • இரவில் நிம்மதியாக உறங்கினால் மனக்கவலை, ஆழ்ந்த சிந்தனை, ஞாபக மறதி, கண்களில் ஏற்படும் கருவளையம், உடல் சோர்வு இதுபோன்ற பிரச்சனைகள் குணமாக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
  • தூக்கம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. அனைவரும் சரியான நேரத்தில் உறங்க வேண்டும்.
  • சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது மொபைல் போன் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிக நேரத்தை செல்போனில் செலவிடுவதை விட நல்ல கதைகள் இருக்கும் புத்தகங்களை படித்தால் மனதிற்கு நல்லதாக அமையும்.
  • கைபேசியில் இருந்து ஏற்படும் கதிர்வீச்சு காரணமாகும் கருவளையங்கள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | கோடைக்காலத்துக்கு ஏற்றச் சரும பராமரிப்பு டிப்ஸ்

உணவு:

  • தினசரி உணவுகளை உரிய நேரத்தில் உட்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
  • கீரை சாப்பிடுவதால் கண்களில் ‘மாகுலர் டிஜெனரேஷன்’ மற்றும் கண்புரை தொடர்பான கண்களில் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ளலாமாம். 
  • சதராணமாக நம் கண்களில்  தூசி படிந்திருக்கும். இதனால், நாம் கண்களில் தண்ணீர் வைத்துக் கழுவுவது அவசியம் ஆகும். 
  • கீரை வகைகளை உணவு பழக்கமாக வைத்துகொள்ளும் நபர்களுக்கு  மாகுலர் சிதைவுக்கான ஆபத்து குறைவாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.  
  • இதனால் பார்வை குறைபாடு மற்றும் குருட்டுத்தன்மைகள் போன்றவை வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளதாம். 
  • கண்புரை என்பது நம் கண்களில் இருக்கும் லென்ஸ் எனப்படும். புற ஊதா சேதத்தைத் தடுக்க கிரை உதவுவதாக கூறப்படுகிறது.
  • அன்றாட வாழ்க்கையை நல்ல உரக்கத்தில் தொடர்ந்தால் கண்களில் ஏற்படும் கருவளையம் நீங்கி மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.

மேலும் படிக்க | சருமம் இயற்கையாகவே பொலிவு பெற வேண்டுமா... இந்த 5 பழங்களை அடிக்கடி சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News