இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, புதன்கிழமை People for the Ethical Treatment of Animals (PETA) 2019-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த நபர் என பெயரிடப்பட்டார்.
கோலி விலங்கு உரிமைகளை ஆதரிப்பவர் மற்றும் விலங்குகளுக்கான நிலைமைகளை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியது என தெரியப்படுத்தும் வகையில் PETA இந்த அறிவிப்பினை வெளியிட்டள்ளது. முன்னதாக ராஜஸ்தானின் அமர் கோட்டையில் சவாரிகளுக்குப் பயன்படுத்தப்படும் யானை மால்டியை விடுவிக்கக் கோரி அதிகாரிகளுக்கு பெட்டா இந்தியா சார்பாக ஒரு கடிதத்தை கோலி அனுப்பியிருந்தார். அவரின் செயல்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டது.
விலங்குகள் மீதான வன்முறைச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு, விலங்குகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையில் விலங்குகளுக்கு கொடுமை தடுப்புச் சட்டம் 1960 புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பெட்டா இந்தியாவுக்கு கோலி கோரிக்கை விடுத்துள்ளார்.
விலங்குகளை மதிக்கும் வகையில் சைவ உணவுகளை உண்ணும் கோலி, அவ்வப்போது விலங்குகள் பராமரிப்பு மையங்களுக்கு சென்று தனது விலங்கின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார். மேலும் தனது ரசிகர்களிடன் விலங்கு வளர்ப்பு தொடர்பாக வேண்டுகோள் முன் வைக்கையில்., ஒரு போது விலங்குகளை கடைகளில் இருந்து வாங்க வேண்டாம், ஆதரவற்ற விலங்குகளை தத்தெடுத்து பழகுங்கள் என குறிப்பிட்டு வருகின்றார்.
"விராட் கோலி ஒரு கடுமையான விலங்கு உரிமை ஆதரவாளர், அவர் தன்னால் முடிந்தவரை விலங்குகளிடம் அன்பை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்குவதில்லை. பெட்டா இந்தியா அனைவரையும் தனது வழியைப் பின்பற்ற ஊக்குவிக்கிறது, எப்போதும் தேவைப்படும் விலங்குகளுக்கு வழக்காடுபவர்களாக இருக்க வேண்டும்" என்று பெட்டா இந்தியாவின் பிரபல மற்றும் பொது இயக்குநர் சச்சின் பங்கேரா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, டாக்டர் சஷி தரூர், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எஸ்.பனிகர் ராதாகிருஷ்ணன், மற்றும் நடிகர்கள் அனுஷ்கா சர்மா, சன்னி லியோன், சோனம் கபூர், கபில் சர்மா, ஹேமா மாலினி, ஆர் மாதவன் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் பெட்டா இந்தியாவின் சிறந்த விருதைப் பெற்றுள்ளனர்.
பெட்டா இந்தியாவின் குறிக்கோள் "விலங்குகள் பரிசோதனை பொருளாகவோ, சாப்பிடும் பொருளாகவோ, அணிகளன் பொருளாகவோ, பொழுதுபோக்கு பொருளாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் துஷ்பிரயோகம் செய்யும் பொருளாகவோ பார்க்கப்படகூடாது" என்பதாகும், மேலும் இந்த குழு இனவெறியை, மனித மேலாதிக்க உலகக் கண்ணோட்டத்தை எதிர்க்கிறது.