அட நம்புங்க…. இந்த 1 Rupee Coin இருந்தா நீங்க லட்சாதிபதி ஆகலாம்!!

நீங்கள் 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்க விரும்பினால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இதற்கு உங்களிடம் ஒரே ஒரு பழைய ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் போதும்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 13, 2020, 07:32 PM IST
  • 1913 இன் 'ஒரு ரூபாய்' நாணயத்தின் மதிப்பு 25 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 18 ஆம் நூற்றாண்டு நாணயத்தின் விலை ரூ .10 லட்சமாகும்.
  • பழைய நாணயங்களை விற்க, நீங்கள் இண்டியாமார்ட்டின் வலைத்தளமான indiamart.com க்கு செல்ல வேண்டும்.
அட நம்புங்க…. இந்த 1 Rupee Coin இருந்தா நீங்க லட்சாதிபதி ஆகலாம்!!

கொரோனா காலத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும், மக்களுக்கு வீட்டு செலவை நிர்வகிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இந்த கடினமான சூழலில், நீங்கள் ஒரு லட்சாதிபதியாவது பற்றி யாராவது பேசினால், கண்டிப்பாக அது உங்களுக்கு ஒரு நகைச்சுவையாகத்தான் தோன்றும். ஏனெனில் லட்சாதிபதியாக கடின உழைப்பு, வலுவான திட்டமிடல் மற்றும் நீண்ட நேரம் தேவை.

இதற்குப் பிறகும், நீங்கள் ஒரு நாணயத்தால் (Coin) 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்று நாங்கள் கூறினால், அது நகைச்சுவையாக இருக்க முடியாது அல்லவா? இது கனவும் அல்ல. முற்றிலும் உண்மையான ஒரு விஷயம்தான் இது.

நீங்கள் 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்க விரும்பினால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இதற்கு உங்களிடம் ஒரே ஒரு பழைய ஒரு ரூபாய் நாணயம் (One Rupee Coin) இருந்தால் போதும். இந்த நாணயம் சாதாரண நாணயமாக இருக்கக்கூடாது, 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த நாணயமாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் ஒரு பெரிய ஆன்லைன் சந்தையான இந்தியாமார்ட்டில் (Indiamart) பழைய மற்றும் பழங்கால நாணயங்கள் ஏலம் விடப்படுகின்றன. உங்களிடம் மிகவும் பழைய மற்றும் அரிதான நாணயம் இருந்தால் இந்த ஏலத்தில் நீங்களும் பங்கேற்கலாம். இங்கே நீங்கள் உங்கள் நாணயங்களை லட்சத்தில் விற்கலாம்.

ALSO READ: 10 ஆண்டுகளில் 10 குழந்தைகள்: இன்னும் 2 வேண்டும் என்னும் US பெண்மணி!!

100 ஆண்டு பழமையான நாணயத்தின் விலை 25 லட்சம் ரூபாய்

உங்களிடம் 1913 ஆம் ஆண்டின் 'ஒரு ரூபாய் நாணயம்' இருந்தால், அதை விற்று 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த தளத்தில், 1913 இன் 'ஒரு ரூபாய்' நாணயத்தின் மதிப்பு 25 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு வெள்ளி நாணயம் மற்றும் விக்டோரியன் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஈஸ்ட்-இந்தியாவின் நாணயம்

இந்தியா மார்ட்டில் 18 ஆம் நூற்றாண்டு நாணயத்தின் விலை ரூ .10 லட்சமாகும். 1818 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியின் (East India Company) ஒரு நாணயத்தின் மதிப்பு ரூ .10 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செப்பு நாணயத்தில் ஆஞ்சனேயரின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.

நாணயத்தை இந்த வகையில் விற்கலாம்

பழைய நாணயங்களை விற்க, நீங்கள் இண்டியாமார்ட்டின் வலைத்தளமான indiamart.com க்கு செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் நீங்கள் உங்கள் அகௌண்டை உருவாக்க வேண்டும். அகௌண்டை உருவாக்கிய பிறகு, நீங்கள் இங்கே ஒரு விற்பனையாளராக பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவுசெய்த பிறகு, இப்போது உங்கள் நாணயங்களின் படத்தை பதிவேற்றி விற்பனைக்கு வைக்க வேண்டும்.

பழங்கால விஷயங்களை விரும்பும் மக்களுக்கு இதுபோன்ற நாணயங்கள் தேவையாக இருக்கின்றன. சில சமயங்களில் இவற்றில் அதிக நாட்டம் உள்ளவர்கள் பழங்கால பொருட்களுக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். 

ALSO READ: 1 hour-க்குள் 33 dishes செய்து 10 வயது கேரளப் பெண் செய்த சுவையான சாதனை!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News