மருதாணி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. பொதுவாக மருதாணியை கைகளில் மற்றும் தலைமுடிக்கு பயன்படுத்தி வருகின்றனர்ஜ். இவை முடிக்கு கண்டிஷனராகப் பயன்படுத்தப்படுகிறது. மருதாணியை முடிக்கு தடவினால் அது முடிக்கு செழுமையான சிவப்பு-பழுப்பு நிறத்தை தருகிறது. ஆனால் இவற்றிலும் சில பக்கவிளைவுகள் உள்ளது. எந்தவொரு முடி சிகிச்சையை போலவும், இவற்றை பயன்படுத்தினாலும் சில ஆபத்துகள் உள்ளது. எனவே மருதாணியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வாமை
முடிக்கு மருதாணியை பயன்படுத்துவதால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று ஒவ்வாமை ஆகும். பலருக்கு இந்த பிரச்சனை இல்லை என்றாலும், ஒருசிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் அரிப்பு, வீக்கம், தோலில் சொறி ஆகியவை ஏற்படலாம். மேலும் ஒருசிலருக்கு ஒவ்வாமை எதிர்வினை தோல் அழற்சியை ஏற்படுத்தலாம். இவற்றை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் தலையில் மருதாணியை பயன்படுத்தும் முன் யோசனை செய்து கொள்வது நல்லது.
மேலும் படிக்க | எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் பண்ணவே கூடாது!!
முடி வறட்சி
மருதாணியை அடிக்கடி பயன்படுத்தினால் அல்லது நீண்ட நேரம் முடியில் தடவினால் அதன் பண்புகள் முடி வறட்சி மற்றும் உடையக்கூடிய தன்மைக்கு வழிவகுக்கும். மருதாணியை நீண்ட நேரம் முடியில் தடவி இருந்தால் அவை இயற்கை எண்ணெய்கள் மற்றும் ஈரப்பதத்தை அகற்றும். இதன் விளைவாக முடி கரடுமுரடாகவும், உடையக்கூடியதாகவும் மாறும். எனவே, முடிக்கு மருதாணியை பயன்படுத்தும் முன்பு, கண்டிஷனிங் அல்லது எண்ணெய் சிகிச்சைகளை பின்பற்றுவது அவசியம்.
கருமை நிறம்
மருதாணியை முடிக்கு பயன்படுத்தி வந்தால் முடியின் கருமை நிறம் மாறுகிறது. மருதாணி பொதுவாக முடிக்கு சிவப்பு-பழுப்பு நிறத்தை அளிக்கும். அதே வேளையில் இதன் காரணமாக வரும் நிறம் பல்வேறு முடி வகைகள் மற்றும் அமைப்புகளில் வித்தியாசமாகத் தோன்றும். காலப்போக்கில் மருதாணியை முடிக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது முடியின் கருமையை பாதிப்படைய செய்யும்.
எரிச்சல்
மருதாணியை முடிக்கு பயன்படுத்தி வந்தால் சில நாட்களில் தலையில் எரிச்சல் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இது தலையில் அரிப்பு அல்லது சிவத்தல் போன்றவற்றை வெளிப்படுத்தலாம். மருதாணி தரும் ஒவ்வாமை அல்லது அதில் இருக்கும் பண்புகள் காரணமாக இந்த எரிச்சல் ஏற்படலாம். தலையில் ஏற்படும் இந்த எரிச்சலைக் குறைக்க, முடிக்கு நீண்ட நேரம் மருதாணி தடவுவதை தவிர்க்கவும். அதே போல தடவிய பின்பு, முடியை நன்கு கழுவுவதை உறுதி செய்வது முக்கியம்.
முடி அமைப்பு
முடிக்கு அடிக்கடி மருதாணி தடவுவது காலப்போக்கில் முடியின் அமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்த கூடும். மருதாணி முடிக்கு நல்ல கண்டிஷனிங்காக பயன்பட்டாலும், சிலருக்கு அவை தீங்கு விளைவிக்கின்றன. இந்த பிரச்சனைகளை தவிர்த்து முடி அமைப்பைப் பாதுகாக்க, மருதாணியை அடிக்கடி தலைக்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும். மருதாணி ஒரு பிரபலமான இயற்கையான கண்டிஷனர் என்றாலும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மருதாணியால் ஒவ்வாமை எதிர்வினைகள், வறட்சி, உடையக்கூடிய தன்மை, நிற மாறுபாடு, எரிச்சல் மற்றும் முடி அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆகிய பக்க விளைவுகள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ