மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு 11:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த 30-ம் மேற்பட்ட கடைகள் தீயினால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிரகணம் சரியில்லை என்றும் தற்போது மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தால், குழந்தைகளுக்கு ஆபத்து என்றும் மக்களிடையே வதந்திகள் பரவி வருகிறது.
இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் அம்மன் கோவிலுக்கு வளையல் போட வேண்டும் என்றும் ஆண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீட்டு வாசலில் விளக்குகள் ஏற்ற வேண்டும் என கூறப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் பரவி வரும் இந்த வதந்தியால், அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.