காஞ்சிபுரத்தில் புகழ் பெற்ற வரதராஜா பெருமாள் கோயிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று சாமி ஊர்வலத்தின்போது, பாடல்கள் இசைக்கப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று இரவு முதல் பெய்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் கார்டின் கடவு எண்ணினை தவறாக உள்ளிடப்பட்டு கார்ட் முடக்கப்பட்டதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் பிச்சை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற குமரகோட்டை முருகன் கோவில் வெளியே ரஸ்ய நாட்டைச் சேர்ந்த எவன்ஜலின் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்த வியந்த பக்தர்கள் அவருக்கு உதவி செய்தனர். பிறகு அங்கு வந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடந்த விவரத்தினை தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் நேற்று மாலை 6.30 அளவில் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் தனபால்(46). ஆள் கடத்தல், கொலை மிரட்டல், என 45-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில் இவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
வெளிநாடுகளில் இருந்தபடியே தன் செயல்பாடுகளை இவர் செயல்படுத்தி வந்த நிலையில் அமலாக்கத்துறை இவருடைய பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பாளர் அறிவிப்பை விரைவில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளியிடுகின்றன.
இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்று காஞ்சிபுரம் வருகிறார். அரக்கோணம், 'ராஜாளி' கடற்படை தளத்தின் விமான தளத்தில் இருந்து, கார் மூலம் காஞ்சிபுரத்திற்கு, பகல், 2:00 மணிக்கு வருகிறார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வாகன சேவையையும் தொடங்கி வைத்தார். தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறை வாகன சேவைகளையும் தொடங்கி வைத்தார்.
ரூ111,03 மதிப்பிலான திட்டங்களுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.3.04 கோடி மதிப்பிலான உபகரணங்களை தீயணைப்பு துறைக்கு வழங்கினார். வணிக வரித்துறை வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வர்தா' புயலால் மிகவும் பாதிப்பு அடைந்த சென்னை , காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளி கல்வித் துறை அமைச்சர் மஃபா. பாண்டியராஜன் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த இரு தினங்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளையும் (14.12.2016) விடுமுறை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.