Personality by Zodiac Sign: வாழ்க்கையில் மகிழ்ச்சியான, ஆதரவான, அன்பான காதல் துணை கிடைத்து விட்டால், ஒவ்வொருவரின் வாழ்வும் சொர்க்கமாகிவிடும். இத்தகைய ஒரு துணையால், கடினமான நேரமும் எளிதாகி விடுகின்றது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) காதல் உணர்வும், அன்பும், பாசமும் சற்று அதிகமாகவே இருகின்றது. இவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை மிகவும் நேசிப்பது மட்டுமல்லாமல், தங்களது காதல் மற்றும் அன்பை அவர்களுக்கு உணரவும் வைக்கிறார்கள். இவர்களுடைய இந்த குணம், இவர்களது துணையை எப்போதும் ஈர்த்து, இவர்கள் மீது தணியாத காதலை அளிக்கின்றது. இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் எப்போதும் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
ரிஷபம் (Taurus): ரிஷப (Taurus) ராசிக்காரர்களைப் பார்த்தால், பொதுவாக ரோமாண்டிக்காகத் தெரியாது. எனினும், அவர்கள் தங்கள் காதல் / வாழ்க்கைத் துணையை மகிழ்விக்க எந்த வாய்ப்பையும் விடுவதில்லை. இவர்கள் பிறரை நேசிப்பதிலும் அதை வெளிப்படுத்துவதிலும் வல்லவர்கள். எந்த வித சூழலாக இருந்தாலும், இவர்கள், தாங்களும் மகிழ்ச்சியாக இருந்து, தங்கள் துணையையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இவர்கள் தங்கள் காதல் / வாழ்க்கைத் துணையின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
கன்னி (Virgo) : கன்னி ராசிக்காரர்கள் மிகவும் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள், அன்பானவர்கள். அவர்கள் எப்போதும் தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். ஆனந்த அதிர்ச்சிகளை கொடுப்பதில் இவர்கள் வல்லவர்கள். கன்னி ராசிக்காரர்களின் காதல் துணையாக வாழ்க்கைத் துணையாக இருப்பவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள் என்றும் சொல்லலாம்.
சிம்மம் (Leo) : சிம்ம ராசிக்காரர்கள் அன்பில் மிகவும் விசுவாசமாக இருப்பதோடு, தங்கள் துணையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இவர்கள் தங்கள் துணையின் இதயத்தை வெல்வதற்கான அனைத்து வழிகளையும் அறிந்து வைத்திருப்பார்கள். தங்கள் சிறப்பான காதல் பாணியால் இவர்கள் தங்கள் துணையின் இதயத்தை ஆள்கிறார்கள். இவர்களிடம் யாராலும் நீண்ட நாட்களுக்கு கோவமாக இருக்க முடியாது.
கடகம் (Cancer) : கடக (Cancer) ராசிக்காரர்கள் தங்கள் துணையிடம் நேர்மையாகவும், உறுதியாகவும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் துணையை மிகவும் நன்றாக கவனித்துக்கொள்பவர்களாக இருப்பவர்கள். தங்கள் துணையின் விருப்பு வெறுப்புகள் அனைத்தையும் மனதில் வைத்து அதன் படி நடந்துகொள்வார்கள். கடக ராசிக்காரர்கள் தங்கள் காதல் / வாழ்க்கைத் துணையை மகிழ்விக்க அனைத்து வழிகளிலும் முயற்சி செய்வார்கள்.
மீனம் (Pisces) : மீன ராசிக்காரர்கள் ரொமாண்டிக் என்பதைத் தவிர, உணர்வுப்பூர்வமாகவும் இருப்பார்கள். தங்கக் துணையின் ஒவ்வொரு தேவையையும் உணர்வுகளையும் இவர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். தங்கள் காதல் / வாழ்க்கைத் துமைணை எதையும் தெரிவிக்காமலேயே மீன ராசிக்காரர்கள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறார்கள். இது தவிர, காதலை காண்பிப்பதற்கான எந்த வாய்ப்பையும் இவர்கள் தவற விடுவதில்லை. திருமணமாகி பல வருடங்கள் ஆன பிறகும் இவர்கள் படு ரொமாண்டிக்காக டேட்டிங் செல்லவும் தயாராகி விடுவார்கள், அத்தகைய கூல் பேர்வழிகள் மீன ராசிக்காரர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR