WATCH VIDEO: இணையத்தை கலக்கும் ராகுல்-வாரியர்!

ஒரே நாளில் புருவ புயல் பிரியா வாரியரை பின்னுக்குத்தள்ளிய ராகுல்காந்தி இணையத்தை கலக்கும் புதிய வீடியோ! 

Written by - Devaki J | Last Updated : Jul 21, 2018, 11:37 AM IST
WATCH VIDEO: இணையத்தை கலக்கும் ராகுல்-வாரியர்!  title=

ஒரே நாளில் புருவ புயல் பிரியா வாரியரை பின்னுக்குத்தள்ளிய ராகுல்காந்தி இணையத்தை கலக்கும் புதிய வீடியோ! 

சமிபத்தில் "ஜிமிக்கி கம்மல்" உலக அளவில் வைரலாக பரவி அனைவரது கவணத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து தற்போது திரைக்குவர உள்ள "ஒரு ஆடர் லவ்" எனும் மளையால திரைப்படத்தின், "மணிக்கய மலரே பூவே" பாடலின் வீடியொ கிலிப் ஒன்று தற்பொது இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

அதில், புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த படம் ஒரு ஆடர் லவ். அந்த படத்தின் இடம் பெற்றுள்ள பாடல் மாணிக்ய மலரே பூவி என்ற பாடல்.  இப்பாடல் காட்சியில் நடிகை ப்ரியா வாரியார் கண்ணடிக்கும் காட்சியாது இணையத்தில் வைரலாக பரவி வந்தது. 

இதையடுத்து, இன்று மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இந்த தீர்மானத்துக்காக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ராகுல்காந்தி பஜகா-வை சரமாரியாக விமர்சித்து உரையாற்றினார்.  

இதையடுத்து, தனது ஆக்ரோசமான உரையை முடித்த பின்னர் பிரதமர் மோடி இருக்கும் இடத்திற்கு சென்று மோடியை கட்டியணைத்தார். பின்னர், ராகுலை அழைத்து கைகுலுக்கினார். இத்துடன் தனது குறும்புத்தனத்தை ராகுல்காந்தி முடித்து கொள்ளவில்லை.  

இதையடுத்து, தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தவுடன், ராகுல் சற்று திரும்பி மோடியை பார்த்து கண் அடித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இத்தகைய சுவாரஸ்ய நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் #NoConfidenceMotion #RahulGandhi என்ற ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர். 

இதையடுத்து, இணையத்தில் ராகுல்காந்தியின் கண் அடிக்கும் புகைப்படத்தை புருவ அழகி பிரியா வாரியரின் கண் அடிக்கும் புகைப்படத்துடன் இணைத்து மீம்ஸ் போட்டு  ப்ரியா வாரியரை விட நன்றாக கண்ணடிக்கிறார் என தெரிவித்து வருகின்றனர். 

Trending News