உலகின் மிகப்பழமையான முத்து அபுதாபியில் கண்டுபிடிப்பு..!

உலகிலேயே மிகப்பழமையான முத்து ஒன்றை அபுதாபி தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்!!

Last Updated : Oct 21, 2019, 06:11 PM IST
உலகின் மிகப்பழமையான முத்து அபுதாபியில் கண்டுபிடிப்பு..!  title=

உலகிலேயே மிகப்பழமையான முத்து ஒன்றை அபுதாபி தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்!!

ஐக்கிய அரபு தலைநகரான அபுதாபியில் அமைந்துள்ள மறவா தீவில் பல ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வுகள் நடந்துவருகின்றன. இந்த ஆய்வில் பழங்காலத்தை சேர்ந்த கற்சிற்பங்கள், கற்களால் செய்யப்பட்ட மணிகள், பீங்கான் பொருட்கள் ஆகியவை கிடைத்துள்ளன. இந்நிலையில், சமீபத்தில் பழமையான முத்து ஒன்றும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த முத்து கி.மு.5800 முதல் கி.மு.5600 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்ததாக தொல்லியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

உலகின் பழமையான முத்து என கருதப்படும் இந்த இயற்கை முத்து சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. குறிப்பாக கி.மு.5800 முதல் 5600 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது கற்காலத்தின் கடைசி பகுதியை சேர்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும்,  மெசப்படோமியா மற்றும் பண்டையா ஈராக் ஆகிய நாடுகளுடன் அரபு நாடுகள் பழங்காலத்திற்கு முன்பே முத்து நகைகள் வணிகம் செய்யப்பட்டிருக்கக்கூடும் எனவும் தொல்லியல் துறையினர் கூறிகின்றனர்.  

 

Trending News