உடலுறவுக்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செக்ஸ் ரோபோக்கள்

குடும்ப வாழ்க்கைக்காகவும், உடலுறவு கொளவதற்கு என பிரத்யேக ரோபோக்களை தயாரித்து வருகின்றனர்...! 

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Oct 11, 2018, 07:46 PM IST
உடலுறவுக்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செக்ஸ் ரோபோக்கள்
Representational Image

குடும்ப வாழ்க்கைக்காகவும், உடலுறவு கொளவதற்கு என பிரத்யேக ரோபோக்களை தயாரித்து வருகின்றனர்...! 

தற்போதைய காலம் முழுவதும் முழுக்க முழுக்க நவீனமயம் ஆகிவிட்டது. மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளும் ரோபோக்களை கொண்டு செய்து வருகின்றனர். கார்களை உருவாக்க ரோபோ, வீடுகளை சுத்தம் செய்ய ரோபோ, உணவு தயாரிக்க ரோபோ என எல்லாம் ரோபோக்களின் மயமாக மாறிவிட்டது. 

இப்படி அனைத்திலும் ரோபோக்கள் மயமாக மாறியதையடுத்து உடலுறவு கொளவதற்கு என பிரத்யேக ரோபோக்களை தயாரித்து விட்டனர். அடுத்த 10 ஆண்டுகளில் மனிதர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள ரோபோக்கள் தயாராகிவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Sex Androids  என்று அழைக்கப்படும் இந்த அழகிய Moving Dolls  உடலுறவு பிரச்சனையில் மனிதர்களுக்கு மாற்றாக சக மனிதனின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்க உள்ளன. இது மனிதர்களை போலவே அழகிய உருவங்களை கொண்டதாகவும் இருக்கும் என ஆராய்ச்சியாளர் டாக்டர் ஐயன் பியர்சன் (Ian Pearson) தெரிவித்துள்ளார். 

2025 ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் ரோபோக்களுடன் உறவு கொள்ள அதிகம் விரும்புவார்கள் என்றும், விபசார விடுதிகள், கிளப்புகள் போன்றவை ரோபோக்களை வைத்து செக்ஸ் பிசினஸ் செய்யும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த செக்ஸ் ரோபோக்களை தயாரிக்க முன்பு 6000 டாலர்கள் வரை செலவான நிலையில் தற்போது வந்துள்ள புதிய தொழில்நுட்பம் இந்த செலவை வெகுவாக குறைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த True Companion  என்ற நிறுவனம், உங்கள் மனைவி அல்லது பெண் நண்பருக்கு சரியான மாற்று எங்கள் நிறுவனம் தயாரித்து அளிக்கும் செக்ஸ் ரோபோக்கள்தான் என விளம்பரம் செய்து வருகின்றன. இந்த பெண் ரோபோக்களுக்கு Roxxxy என்றும் ஆண் ரோபோக்களுக்கு Rockey என்றும் பெயரிட்டுள்ளது. 

உலகம் தெர்ழில் நுட்பத்தில் உயர, உயர மனித உணர்வுகள் மங்கிப்போய் வருகின்றன. அன்பான கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடும்ப உறவுகள் இது போன்ற செக்ஸ் ரோபோக்களால் சிதைந்துவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை..!