கோழியையும், முட்டையையும் சைவமாக அறிவிக்க வேண்டும்: சஞ்சய் ரவுத்

சிக்கன், முட்டையை சைவமாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் சிவசேனா எம்.பி கோரிக்கை!!

Last Updated : Jul 20, 2019, 09:38 AM IST
கோழியையும், முட்டையையும் சைவமாக அறிவிக்க வேண்டும்: சஞ்சய் ரவுத் title=

சிக்கன், முட்டையை சைவமாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் சிவசேனா எம்.பி கோரிக்கை!!

பிரபல சிவசேனா தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் அசாதாரணமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். கோழி மற்றும் முட்டைகளை சைவ உணவு வகைகளாக வகைப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார். 

மாநிலங்களவையில் கடந்த திங்கள்கிழமை முன்தினம் ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய மருத்துவ முறைகள் அடங்கிய ஆயுள் அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்தான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேசிய சஞ்சய் ரவுத், சிக்கன் மற்றும் கோழி முட்டையை சைவமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

‘‘நந்தர்பார் பகுதிக்கு உள்பட்ட கிராமம் ஒன்றுக்கு சென்ற போது, அங்குள்ள பழங்குடியினர் எனக்கு உணவளித்தனர். அது ஆயுர்வேத சிக்கன் என்றும் கூறினர். உடல் உபாதைகளுக்கு அது தீர்வளிக்கும் என்றும் கூறினர்’’ என்று சஞ்சய் ரவுத் குறிப்பிட்டார். ஆயுர்வேத உணவுகளை கொடுத்தால் கோழி ஆயுர்வேத முட்டைகளை தரும் என்றும் சஞ்சய் ரவுத் தனது உரையின் மூலம் கூறியுள்ளார்.

மேலும், சட்டமியற்றுபவர் கோழியை ஆயுர்வேத உணவாகக் கருதலாம், அது ஒரு சைவ உணவு உண்பதற்கு ஏற்றது, ஏனெனில் ஆயுர்வேத முட்டையிடும் கோழிக்கு ஆயுர்வேத உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, இதை சைவமாக கருதலாம். அதே ஆராய்ச்சிக்காக ரூத் 10,000 கோடி பட்ஜெட்டைக் கேட்டார்.

சஞ்சய் ரவுத்தின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக பலரும் கிண்டலாக விமர்சித்து வருகின்றனர். அவற்றில் சில பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Trending News